அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்

183 Views

usa sri lanka அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப் பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா ஒருதலைப் பட்சமாக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அதேவேளை அதிகார வரம்பை மீறி பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.

அதன்படி இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட 27 நாடுகள் அமெரிக்காவின் தடைக்குள் உள்வாங்கப் பட்டுள்ளதாகவும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக ரஷ்யாவிலிருந்து பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள எஸ் -400 ஏவுகணைகளை பெற்றுக் கொண்டமை காரணமாக இந்தியாவும் பொருளாதார தடைகளை எதிர் கொண்டுள்ளதாக சீன தூதரகம் சுட்டிக் காட்டியுள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply