சீனாவில் தமிழர்கள் கட்டிய  கோவிலுக்கு  கிடைத்த அங்கீகாரம்

The Hindu Temple That Sits Quietly in Southern China

சீனாவில்  இருக்கின்ற Quanzhou  என்ற மாகாணத்தில் Kaiyuan என்ற இந்து மதத்துடன் தொடர்புடைய தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு  (The Unesco World Heritage List ) யுனஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது.   

இதை நேற்றைய தினம் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழர்கள் 1200 ஆண்டு காலப் பகுதியில் இந்த கோயிலை கட்டியுள்ளனர்.

சீனாவின் கடற்கரை பிராந்தியமான (Fujian) பியுஜியமும் அதில் அமைந்துள்ள Quanzhou என்ற நகரமும் பண்டைய காலம் முதல் தமிழர்களுடன் நெருக்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது என சீனா தெரிவித்துள்ளது.

மேலும் சீனாவினுடைய பண்டைய காலத்திலேயே இந்தக் கோயில் கட்டப்பட்டது.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சீனாவிற்குச் சென்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு வர்த்தக நடவடிக்கைக்காகச் சென்ற தமிழர்கள் அங்கு  பரவாலாக குடியிருக்கவும் செய்தார்கள். இந்த சூழலில் தமிழர் சமூகத்தினர் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளனர்.

இதன் காரணமாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை இது பறைசாற்றுகின்றது என சீனா இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ம் ஆண்டு சீன அதிபர் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார். அப்போது  சீனாவினுடைய Fujian மாகாணமும் தமிழகமும் “sister-state relations”ஆக அங்கீகரிக்க வேண்டும் என்று  ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

அதனுடைய ஓர் முன்னெடுப்பாகவே இந்த கோயிலுக்கு கிடைத்துள்ள  யுனஸ்கோ அங்கீகாரம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ilakku-weekly-epaper-140-july-25-2021