சட்டவிரோதமாக தாயகத்திற்கு தப்பிக்க முயன்ற இலங்கை பெண் கைது

138 Views

இலங்கை பெண் கைது

இலங்கை பெண் கைது: தமிழகம் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து வெளிநாடு தப்பிச் செல்ல அவர் தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சிவனேசன் இவருடைய மகள் கஸ்தூரி (19). 2009ம் நடைபெற்ற போரின் போது இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் வந்து இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த நபருடன் ஏற்பட்ட காதலால் கஸ்தூரி 2018ஆம் ஆண்டு விமான மூலம் சென்னை வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் கஸ்தூரி விசா முடிந்த பின்னும் இலங்கைக்கு திரும்பி செல்லாமல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில்  சட்ட விரோதாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை கிராமத்தில் வசித்து வரும் கஸ்தூரியின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் இலங்கைக்கு திரும்பிச் செல்ல  முயன்ற போது அவர் காவல் துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட கஸ்தூரி தற்போது இராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply