இளம் ஊடகவியலாளர் பிரகாஷுக்கு மட்டக்களப்பில் நினைவேந்தல்

92 Views

மட்டக்களப்பில் நினைவேந்தல்

மட்டக்களப்பில் நினைவேந்தல்: கோவிட் தொற்றுக் காரணமாக அண்மையில் காலமான ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷூக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து இந்த அஞ்சலி நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தன.

யாழ். கொடிகாமத்தினை சேர்ந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் அவரது உடலம் தகனம் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மட்டு. ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் அமரர் ஞானப்பிரகாசம் பிரகாஸின் திருவுருவப்படத்திற்கு விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply