கடனுதவி குறித்து இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்தை

இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்தை

கடனுதவி குறித்து இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்தை

பொருளாதார நெருடிக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு 1.5மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாவும் விரைவில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் தெரிவித்துள்ளார்.

இதுதவிர இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ள ஒரு பில்லியன் டொலர் கடனுதவி குறித்தும் ஆராயப்படுவதாக சீன தூதுவர் குய் ஜென்ஹாங் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த  18 ம் திகதி சீனாவின் அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை வழங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தெருக்கள், விமானநிலையம் அனல் மின்நிலையம் துறைமுகம் ஆகியவற்றை உருவாக்குவதற்காக கடந்த தசாப்தகாலத்தில் இலங்கைக்கு சீனா ஐந்து பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

ஆனால் இந்த நிதி மூலம் உருவாக்கப்பட்ட திட்டங்கள் பொருளாதார ரீதியில் வெற்றியளிக்கவில்லை என விமர்சனங்கள்  முன்வைக்கின்றபோதும் இதனை சீனா நிராகரித்துள்ளது.

ஜனவரி மாதம் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஜியை சந்தித்தவேளை கடன்களை மீளப்பெறுவதை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார் ஆனால் சீனா இதுவரை இது குறித்து பதிலளிக்கவில்லை.

Tamil News