மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையின் கடன் சுமை அதிகரித்து அதன் அந்நிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில்,முகப்பூச்சு, வாசனை திரவியம், உட்பட 300 வகையான நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
இலங்கை அதன் பெருவாரியான தேவையை இறக்குமதி வழியே நிறைவேற்றி வந்த நிலையில், அந்நிய செலாவணி இருப்பு குறைந்ததால் எரிபொருள், மருந்துகள், உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், தடை விதிக்கப்பட்ட 300 வகையான பொருட்கள், ஓகஸ்ட் 23-ம் திகதிக்கு முன்னதாக அனுப்பப்பட்டு செப்டம்பர் 14-ம் திகதிக்குள் இலங்கைக்குள் வரும் பட்சத்தில் அவற்றுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதைய கடன் நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேசசெலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) உதவியை இலங்கை எதிர்நோக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.