உக்ரைனில் தொடருந்து நிலையம் மீது ரஸ்யா நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி

உக்ரைன் தொடருந்து நிலையம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன்  தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியை சேர்ந்த சேப்லைன் நகரில் நடந்த இந்த தாக்குதலில், வண்டி ஒன்றில் வந்துகொண்டிருந்த 5 பேர் தீப்பிடித்து எரிந்து இறந்தனர் என்றும்  இந்த தாக்குதலில்   ஒரு 11 வயது சிறுவன் ஒருவனும் பலியாகியுள்ளதாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு நடுவே இந்த தாக்குதலைப் பற்றி அறிவித்தார் உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஸெலன்ஸ்கி. 50 பேர் இந்த தாக்குதலில் காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது பற்றி இதுவரை ரஷ்யா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

குடிமக்கள் தொடர்புடைய கட்டுமானங்களை குறிவைத்துத் தாக்குவது குறித்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துவருகிறது.

மேலும்  உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தொடங்கி 6 மாதம் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.