மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் உற்பத்திக்காக மூன்று இலட்சம் எருமை, பசு மாடுகளை வளர்க்கும் தரைகள் என்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்நடை வளர்ப்புக்கு அடிப்படையான பாரம்பரிய நிலங்களாகும். இதில் மிக முக்கியமானவை மயிலத்தமடு மற்றும் மாதவணை மேச்சல் தரைகளாகும்.
இப்பகுதிகள் நீண்டகால நில அபகரிப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன.
பல போராட்டங்கள் பல வருடங்களாக இடம்பெற் றும் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. ஆனால் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நிக்கவெரட்டிய விலங்கு வளர்ப்புப் பண்ணையை அபிவிருத்தி செய் வதற்காக மேலும் 1,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக் கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் நாளாந்தப் பால் தேவையில் 43% மாத்திரமே உள்நாட்டில் உற்பத்தி செய் யப்படுவதாக விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணார த்ன தெரிவித்தார்.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக் களத்தின் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக கடந்த (24/07/2026) பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, வருடாந்த பால் உற்பத்தியை 410 மில்லியன் லீற்றரிலிருந்து 1,200 மில்லியன் லீற்றராக அதிகரிப்பதற்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.
எதிர்காலத்தில் நாட்டுக்குத் தேவையான உயர்தர இன பசுக்களை உருவாக்கும் ஒரு மையப் பண்ணையாக நிக்கவெரட்டிய பண்ணையை மாற்றுவதற்கு எதிர் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். நிக்கவெரட்டிய பால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேலும் பல செயற்றிட்டங்கள் தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இலங்கையில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் (கால்நடை திட்டமிடல் மற்றும் பொருளாதாரம்) பணிப்பாளரான வைத்தியர் கே.எம்.எச்.ஜி சரத் பிரியந்த கடந்த 2023இல் இலங்கையில் மாவட்ட மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பாலின் அளவு பின்வருமாறு உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது
மாவட்டம்/ மாகாணம்/உற்பத்தி(லீற்றர்)
கொழும்பு 6,325,833
கம்பஹா 17,106,742
களுத்துறை 10,891,098
மேல் மாகாணம் மொத்தம் :34,323,673
கண்டி 10,638,940
மாத்தளை 10,571,598
நுவரெலியா 53,828,234
மத்திய மாகாணம் மொத்தம் :75,039,067
காலி 8,424,978
மாத்தறை 5,031,282
ஹம்பாந்தோட்டை 15,190,860
தென் மாகாணம் மொத்தம் :28,647,120
யாழ்ப்பாணம் 17,044,922
கிளிநொச்சி 5,852,921
மன்னார் 1,974,909
வவுனியா 13,321,132
முல்லைத்தீவு 6,927,892
வட மாகாணம் மொத்தம் :45,121,776
மட்டக்களப்பு 5,176,627
திருகோணமலை 9,027,214
அம்பாறை 12,862,342
கிழக்கு மாகாணம் மொத்தம் :27,062,183
குருநாகல் 43,565,746
புத்தளம் 13,518,207
வடமேல் மாகாணம் மொத்தம் :57,083,953
அனுராதபுரம் 51,128,081
பொலன்னறுவை 14,365,485
வடமத்திய மாகாணம் மொத்தம் .65,493,566
பதுளை 19,605,339
மொனறாகலை 11,699,543
ஊவா மாகாணம் மொத்தம் :31,304,882
இரத்தினபுரி 37,71,625
கேகாலை 2,476,037
சப்ரகமுவ மாகாணம் மொத்தம்:6,247,662
வடக்கு கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரை வடமாகாணத்தில் 45,121,776, லீட்டரும், கிழக்கு மாகாணத்தில் 27,062,183,லீட்டரும் கிடைக்கிறது. ஏனைய மாகாணங்களை விட வடக்கு கிழக்கு இரண்டு மாகாணங்களிலும் காலநிலை புவியல் அமைப்புகளுடன் ஒப்பிட்டு நோக்கினால் கறவை பசுக்களை வீட்டில் கட்டி வளர்பதுடன் மேச்சல் தரைகளில் விட்டு வளர்க்கும் பாரம்பரிய நடைமுறையே வழக்கமாக பேணப்பட்டு வருகிறது. எருமை மாடுகள் வீட்டில் கட்டிவளர்க்கமுடியாது என்பதும் உண்மை,இதில் கிழக்கு மாகாணத்தில் முள்ளிவாய்க்காலில் 2009, மே,18, ல் போர் மௌனித்தபின்னர் கடந்த 17, வருடங் களாக மாடுகள் மேயும் மேச்சல் தரைகளை திட்டமிட்டு வெளிமாவட்ட சிங்களமக்கள் அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்வதால் மாடுகளை மேச்சல் தரைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை தொடர்கிறது.
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ காலம் தொடக்கம் மைத்திரி, கோட்டா, ரணில், தற்போது அநுர ஆகிய நான்கு ஜனாதிபதிகள் ஆட்சி காலம் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல் தரைக்கான நீதி கிடைக்கவில்லை. தொடர் போராட்டமே இடம்பெறுகிறது.
காலத்துக்காலம் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கி ணைப்பு கூட்டங்களில் மேச்சல் தரை தொடர்பாக வலி யுறுத்தப்படும், தொடர் போராட்டங்கள் இடம்பெற்றும் எந்த பலனும் இல்லை. ஒவ்வொரு கதைகளை கூறி பண்ணை யாளர்களை ஏமாற்றுவதையே காணலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2026, மே,20, ம் திகதி ஜனாதிபதி அநுர கலந்துகொண்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் நீண்டகால பிரச்சினை யாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக, 1570 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். 1570 ஏக்கர் என்பது முழுமையான தீர்வாக அமையாது இருந்தபோதும் முதல் கட்டமாக அதனை பெறுவதற்கு பண்ணையாளர்கள் சம் மதித்தனர்.
ஜனாதிபதி பணிப்புரை விடுத்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை அந்த காணிகள் உத்தியோகபூர்வமாக சட்டரீதியாக வர்தமானி அறிவிப்புமூலமாக விடுவிக்கப்படவில்லை அதைவிட அப்பகுதியில் பண்ணையாளர்கள் பல இன்னல்களை தொடர்ச்சியாக இப்போதும் எதிர்கொண்டு வருகின்றனர். பண்ணையாளர்களையும், மாடுகளையும் இலக்குவைத்து வெளிமாவட்டத்தை சேர்ந்த சிங்களவர்கள் அச்சுறுத்தல் கொடுத்தவண்ணமே உள்ளனர்.
மேய்ச்சல் தரைகள் அத்துமீறிய வெளிமாவட்ட சிங்களவர்களால் உழவு செய்யப்பட்டு விவசாயப் பயிர்கள் செய்யப்படுகின்றன. வெளி மாவட்டங்களிலிருந்து வரும் சிங்கள நபர்கள் பண்ணையாளர்களுக்கு எதிரான அச்சுறுத் தல்களை ஏற்படுத்துவதால் பதற்றமான சூழ்நிலை கள் நிலவுகின்றன. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் பண்ணையாளர்களின் முறைப் பாடுகளை ஏற்க பொலிசார் மறுப்பதாகவும் பண்ணையாளர் களால் கூறப்படுகின்றது.
உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மேச்சல் தரைகளை அபகரித்து அங்கு திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள பிரதிநித்துவத்தை உறுதி செய்யவே மாறி மாறி ஆட்சிசெய்த அரசாங்கங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். மயிலத்தமடு மற்றும் மாதவணை பிரச்னை என்பது இன்று நேற்று நடக்கும் பிரச்னை அல்ல. இது பல ஆண்டுகளாக இந்த மக்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.
கடந்த 2024, தொடக்கம்,2026, இரண்டு வருடங்களைக் குள் சுமார் 2000 மாடுகள் அங்கு கொல்லப்பட்டிருக்கின்றன. வாய்க்கு வெடி வைத்தும், மின்சார வேலிகளில் தாக்கப்பட்டும், ஆயுதங்களால் வெட்டியும் இந்த மாடுகள் கொலை செய் யப்பட்டிருக்கின்றன. மயிலத்தமடு பண்ணையாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை இழந்துள்ளனர்.
வாழ்வாதார்ததை இழக்கக்கூடிய இடத்திற்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பல நீதிமன்ற உத்தரவுகள் இந்த மக்களுக்கு சார்பாக வந்தபோதிலும், நீதிமன்ற உத்தரவுகளைக் கூடப் பொருட்படுத்தப்படு வதில்லை.
இந்தப் பிரச்னைக்கு பல தொடர்போராட்டங்களை மேற்கொண்டும் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. இந்த மக்கள் காலப்போக்கில் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்து இந்த இடத்தை விட்டுப் போகக்கூடிய ஒரு நிழல் யுத்தத்தை இந்த அரசு இன்றைக்கு நடத்திக் கொண்டிருக் கின்றது,
நிக்கவெரட்டிய பால் பண்ணைக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அநுர அரசு குறைந்தபட்சம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் உற்பத்திக்கு மூல காரணமாக உள்ள மயிலத்தமடு, மாதவனை மேச்சல் தரைகளில் அத்துமீறிய பயிர்செய்கை, குடியேற்றங்களை நிறுத்தி பூரணமாக மாடுகள் மேய்வதற்கான நிலமாக அதனை மாற்ற வேண்டும் என்பதே பண்ணையாளர்களுடைய எதிர்பார்ப்பு.



