சீரற்ற வானிலையால் ஏழு பேர் உயிரிழப்பு : ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக 7 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போயுள்ளவரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக இந்த ஏழு உயிரிழப்புகளும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளன.

அதேநேரம் நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு தொடரும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்துடன் சில மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.