சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட நற்பிட்டிமுனை இளைஞர் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தள முகநூல் ஊடகங்களே (FB News Agencies) செய்தி வெளியிட்டு வருகின்றனவே தவிர, சவூதி ஊடகங்களோ அல்லது அங்குள்ள இலங்கைத் தூதரகமோ இதுவரை அதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என இலங்கை உலமா கட்சியின் தலைவரும் முப்தியுமான முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
சவூதியில் வெளிநாட்டவர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால், அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்படும் என்றும், சவூதி பத்திரிகைகளில் அரசு அதனை வெளியிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை அப்படியே நம்பி செயற்படுவதற்குப் பதிலாக உண்மையைக் கண்டறியவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.



