ஜப்பானின் அமைதிப் பெருங்கடல் கடற்கரையை நோக்கி ‘டுஜுவான்’ எனும் சக்திவாய்ந்த சூறாவளிப் புயல் நகர்ந்து வரும் நிலையில், தலைநகர் டோக்கியோவை உள்ளடக்கிய கான்டோ பிராந்தியம் மற்றும் கிழக்கு ஜப்பானின் பல பகுதிகளில் கடும் மழை, காற்று மற்றும் மண்சரிவு அபாயம் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டுஜுவான் புயலானது டோக்கியோ பெருநகரப் பகுதியை நோக்கி நெருங்கி வருவதால், வானிலை நிலைமைகள் அதிவேகமாக மோசமடையக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



