தென் ஆபிரிக்க கலவரம்: 337  பேர் பலி

142 Views

south africa riot2 20210723131717 தென் ஆபிரிக்க கலவரம்: 337  பேர் பலி

தென் ஆபிரிக்காவில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 337 ஆக அதிகரித்துள்ளது.

தென் ஆபிரிக்க நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா ஆட்சியில் இருந்த போது 1999ஆம் ஆண்டு, ஆயுதம் வாங்கியதில்  ஊழல் இடம் பெற்றதாக  குற்றம் சுமத்தப்பட்டு அவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

அது தொடர்பான, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச் சாட்டில், அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் குற்றமற்றவர், தற்போதைய ஆட்சியாளர்கள் அவரைப் பழிவாங்க முயல்கிறார்கள், அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறி, அவரது ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வன்முறையில் இது வரையில் 337 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் பெருமளவிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply