வவுனியா தாண்டிக்குளம் வயல் பகுதியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்று மீட்கப்பட்டது. குறித்த பகுதியில் உள்ள வயல் வெளியில் நின்றவர்களால் இன்று இந்த மண்டை ஓடு ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல் துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து வவுனியா காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.