தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நேற்று மாலை கொழும்பில் உள்ள பிரைட்டன் விடுதியின் மண்டபத்தில் நடைபெற்றது.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நினைவாலயம் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் பெ. இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, பூத்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, கலைஞரின் இலக்கிய செழுமை, அரசியல் பயணம் உள்ளிட்ட விடயங்களை சிறப்புரைகளாக அரசியல் பிரமுகர்களும், கலை, இலக்கியவாதிகளும் உரை நிகழ்த்தினார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கலை, இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.