இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் காவல் துறையினரின் துஷ்பிரயோகம் அதிகரிப்பு -HRW

202108asia sri lanka police இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் காவல் துறையினரின் துஷ்பிரயோகம் அதிகரிப்பு -HRW

கோவிட் -19 தொற்றுநோய் நடவடிக்கைகள் மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு போராட்டம் என்ற போர்வையில் கைது செய்யப்படுபவர்களை இலங்கை  காவல் துறையினர் அதிகளவில் துஷ்பிரயோகம் செய்து வருவதாக (Human Rights Watch) மனித உரிமைகள் கண்காணிப்பகம்  குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம்  வெளியிட்டுள்ள கருத்தில்,

ஊடகங்களில் வெளியாகியிருந்த  சமீபத்திய  காவல் துறையினரின் துஷ்பிரயோகங்களில் நீதி விசாரணைக்கு புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் தன்னிச்சையாக  தடுத்து வைத்தல் ஆகியவை உள்ளடங்குகின்றன. அரசாங்கம் காவல் துறையினரின்   சுயாதீன மேற்பார்வையை சீராக்க வேண்டும்.   அத்துடன்  காவல்துறை துஷ்பிரயோகங்கள் தொடர்பாக,  விசாரித்து வழக்குத் தொடர வேண்டும்.

போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐ.நா. அலுவலகம் மற்றும் பிரிட்டனின் ஸ்கொட்லாந்து  காவல்துறை  போன்ற சர்வதேச பங்காளிகள், பொறுப்புக் கூறல் மற்றும் மறுசீரமைப்பில்  முன்னேற்றம் ஏற்படும் வரை உதவித் திட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021