இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள ‘ Johnson & Johnson’ கோவிட்-19 தடுப்பூசி- சில முக்கியத் தகவல்கள்

download இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள ' Johnson & Johnson' கோவிட்-19 தடுப்பூசி- சில முக்கியத் தகவல்கள்

Johnson and Johnson’s நிறுவனத்தின்  கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், Jonssen COVID-19 Vaccine எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி குறித்த சில முக்கியத் தகவல்கள்…

1.ஏற்கனவே இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள Covishield , Covaxin , Sputnik –  மற்றும்  Moderna  ஆகிய தடுப்பூசிகள், எடுத்துக் கொள்பவர்கள் இரண்டு   தடுப்பூசி செலுத்த வேண்டும். Johnson and Johnson’s நிறுவனத்தின் தடுப்பூசியை ஒரு முறை செலுத்தினால் போதும். இந்த தடுப்பூசி ஒரு முறை செலுத்துவது  என்பதால், இந்த மருந்துக்கான மருத்துவமனை அனுமதிகளும், மருத்துவப் பணியாளர்களும் குறைவாகவே தேவைப்படும்.

  1. biological-e – நிறுவனத்துடன் Johnson and Johnson’s மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இந்தத் தடுப்பூசி தயாரித்து விநியோகம் செய்யப்படும்.

3.அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் நடத்திய பரிசோதனையில், மோசமான உடல்நலக் குறைவு ஏற்படாமல் பாதுகாப்பதில் 85 சதவீதத்துக்கு மேல் செயல் திறனைக் காட்டியது Johnson and Johnson’s கொரோனா தடுப்பு மருந்து.

4.கொரோனாவால் மிதமாக பாதிக்கப்பட்டவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதன் செயல்திறன் 66 சதவீதமாக இருக்கிறது.

  1. Johnson and Johnson’s தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அரிதாக இரத்தம் உறைதல் கோளாறு உண்டானதால் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இதன் விநோயோகத்தை சென்ற ஏப்ரல் மாதம் நிறுத்தி வைத்தன. பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டது.
  2. Johnson and Johnson’s தடுப்பூசி தொடர்புடைய இரத்தம் உறைதல் கோளாறு ‘மிகவும் அரிதானது’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அமைப்பான ஐரோப்பிய மருந்துகள் முகமையும் (European Medicines Agency ) கூறியிருந்தது.

7.இரத்தம் உறைதல் குறித்த பரவலான கவலைகள் எழுந்தபின், இந்தத் தடுப்பு மருந்தால் கிடைக்கும் நன்மைகள் இதனால் உண்டாக வாய்ப்புள்ள பாதிப்புகளை விடவும் அதிகம் என்று ஐரோப்பிய மருந்துகள் முகமை தெரிவித்தது.

    1. 8.68 இலட்சம் பேரில் 6 பேருக்கு மட்டுமே இரத்தம் உறைதல் உண்டானதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (US Food and Drug Administration ) அப்போது தெரிவித்திருந்தது. (இந்தியாவில் “Covishield” எனும் பெயரில் விநியோகிக்கப்படும் oxford – astrazeneca தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் அரிதினும் அரிதான இரத்தம் உறைதல் கோளாறு சில நாடுகளில் உண்டானது குறிப்பிடத்தக்கது.)

ilakku-weekly-epaper-140-july-25-2021