தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியா பயணம்

156 Views

fb img 1590856504559489373513797846945 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியா பயணம்

இரா.சம்பந்தன் தலைமையிலான  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியத் தலைநகர் டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அடுத்துவரும் ஒன்றரை மாதங்களுக்குள் இந்த பயணம் இடம் பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட செயற்பாடுகளை இந்தியத் தரப்புக்கள் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு முழுமையாக பங்கேற்பதா, இல்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பேச்சாளர் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மட்டும் பங்கேற்பதா என்பது தொடர்பில் இன்னமும் இறுதி செய்யப் படவில்லை.

இதே வேளை, கொரோனா நிலைமைகள் அடுத்துவரும் காலத்தில் தீவிரமடையும் பட்சத்தில் இந்தப் பயணம் தள்ளிப் போகலாம் என்றும் தெரிவிக்கப் படுகின்றது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply