யாழ்ப்பாணத்தில் பிறந்து ஒரு நாளேயான குழந்தை ஒன்றுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் பிறந்த குழந்தைக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தையும் தாயும் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் குழந்தைக்குப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டிருந்தது எனவும், அதன்போதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் வைத்தியசாலை கொரோனா பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.