லெபனான் நாட்டின் தூதரை நாட்டை விட்டு வெளியேற செளதி உத்தரவு

134 Views

நாட்டை விட்டு வெளியேற செளதி உத்தரவு

செளதி அரேபியாவில் உள்ள லெபனான் நாட்டின் தூதரை அடுத்த 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற செளதி உத்தரவு வழங்கியுள்ளது.

செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யேமனில் ஆக்கிரமிப்பாளராக இருப்பது போலத் தோன்றுகிறது என, லெபனான் நாட்டின் தகவல் துறை அமைச்சர் ஜார்ஜ் கோர்தாஹி கடந்த வாரம் ஒளிபரப்பான நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். ஆனால் அந்த நேர்காணல் கடந்த ஆகஸ்ட் மாதம், அவர் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டது.

மேலும் யேமன் நாட்டில் செளதி அரேபியா முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகள் பலனற்றவை என்றும், ஹூதி கிளர்ச்சிக் குழுவினர் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும்  அமைச்சர்  கூறி இருந்தார்.

இந்நிலையில், லெபனான் நாட்டின் தூதர அடுத்த 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என செளதி அரேபியா உத்தரவிட்டுள்ளது.

ஆனால் கொர்தாஹியின் கருத்து லெபனான் அரசின் நிலைப்பாடு அல்ல என விளக்கமளித்தது லெபனான் தரப்பு. மேலும் செளதியின் இந்த முடிவு வருத்தமளிப்பதாகவும், செளதி இத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யும் என நம்புவதாகவும் கூறியுள்ளது.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad லெபனான் நாட்டின் தூதரை நாட்டை விட்டு வெளியேற செளதி உத்தரவு

Leave a Reply