அவுஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பில் உள்ள அகதிகளை விடுதலை செய்யுங்கள்: 140 அமைப்புகள் கோரிக்கை

230 Views

குடிவரவுத் தடுப்பில் உள்ள அகதிகளை விடுதலை செய்யுங்கள்

குடிவரவுத் தடுப்பில் உள்ள அகதிகளை விடுதலை செய்யுங்கள்: அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமில் உள்ள காவலாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது.

“தடுப்பு முகாம்களில் உள்ள பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களுக்காக கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்கள்,” எனக் கூறுகிறார் தஞ்சக்கோரிக்கையாளர் வள மையத்தின் திட்ட மேலாளர் சதாப் இஸ்மாயில்.

இந்த நிலையில், குடிவரவுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களை சமூகத்திற்குள் விடுதலைச் செய்யுமாறு தஞ்சக் கோரிக்கையாளர் வள மையம், ஆமென்ஸ்டி இண்டர்நேஷனல், மனித உரிமைகள் சட்ட மையம் உள்ளிட்ட 140 அமைப்புகள் அவுஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply