ஜோசப் ஸ்டாலின் விடுதலை: – பி.மாணிக்கவாசகம்

681 Views

ஜோசப் ஸ்டாலின் விடுதலை

அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டவர்களும், பாதிக்கப் படுபவர்களும் தங்களுடைய உணர்வுகளை வெளிப் படுத்துவதைத் தடை செய்வதற்கு சுகாதார நடை முறையிலான தனிமைப் படுத்தல் சட்டம் பயன்படுத்தப் பட்டிருந்தது. இதனை யடுத்து கிளர்ந்திருந்த போராட்டங்களுக்கு அஞ்சியதனாலோ அல்லது தனது தவறை உணர்ந்த தனாலோ என்னவோ முல்லைத் தீவு இராணுவ முகாம் தனிமைப் படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டிருந்தவர்களை அரசு விடுதலை செய்திருக்கின்றது.

ஜோசப் ஸ்டாலின் விடுதலைஜோசப் ஸ்டாலின் விடுதலை: – பி.மாணிக்கவாசகம்

அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதனால் கைது செய்யப்பட்டு, கோவிட் 19 நோய் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றப் பிணை வழங்கப்பட்ட 22 பேரை பலவந்தமாகத் தனிமைப் படுத்தல் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்த மையைப் பல தரப்பினரும் கண்டித்தனர். கடுமையாக விமர்சித்திருந்தனர்.  குறிப்பாக உயர் கல்வியைத் தனியார் மயப்படுத்துகின்ற போர்வையின் கீழ் இராணுவ மயப்படுத்தும் சட்ட உருவாக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டப் போராட்டம் நடத்தியவர் களுக்கு எதிராகவே இவ்வாறு கோவிட் 19 பெருந்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைச் சட்டம் பாய்ச்சப் பட்டிருக்கின்றது.

ஜோசப் ஸ்டாலின் விடுதலைகோவிட் 19 தடுப்புச் சட்டத்திற்கு அமைவான சுகாதார நடை முறைகளைப் பறக்கணித்துச் செயற்பட்டிருந்தார்கள் எனக் குற்றஞ்சாட்டி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கியஸ்தர்கள் எனத் தெரிவு செய்யப்பட்ட 30இற்கும் மேற் பட்டவர்களை பொலிசார் கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்தினர்.

சுகாதார நெறி முறைகளை மீறுபவர்களுக்கு சிறைத் தண்டனையும், தண்டமும் விதிக்கப் படும் என்ற சட்ட நடை முறை இருந்த போதிலும், பிணையில் செல்ல அனுமதித்திருந்த நீதிமன்ற உத்தரவுக்கு முரணான வகையில் அவர்களில் இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16இற்கும் மேற் பட்டவர்களை பொலிசார் முல்லைத்தீவு இராணுவ முகாம் தனிமைப் படுத்தல் நிலையத்தில் பலவந்த மாகத் தடுத்து வைத்தனர்.

முன்னதாக இதே போன்று அரச பொறியியல் கூட்டுத் தாபனத் தொழிலாளர்கள் தமக்குரிய சம்பளக் கொடுப்பனவுகள் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் கைது செய்யப்பட்ட எட்டுப் பேரை நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்திருந்தது. ஆயினும் அவர்களில் 6 பேரை பொலிசார் கண்டி பள்ளேகலை தனிமைப்படுத்தல் நிலைய த்தில் தடுத்து வைத்தனர்.

புறக்கணிப்புப் போராட்டம்

ஜோசப் ஸ்டாலின் விடுதலைபொலிசாரின் இந்த நடவடிக்கை சட்டத்தை மீறிய செயல் என்றும், அரசுக்கு சார்பான முறையில் தனிமைப் படுத்தல் சட்டம் நடை முறைப்படுத்தப் பட்டுள்ளது என்றும் குற்றம் சுமத்தி எதிரணியினரும், பொது அமைப்பு க்களைச் சேர்ந்தோரும் கண்டித்து ள்ளனர். அது மட்டு மல்லாமல், இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜேசப் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் தனிமைப் படுத்தல் தடுத்து வைப்புக்கு எதிராக ஆரம்பிக்கப் பட்ட  தொழிற் சங்கப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப் பட்டிருக்கின்றது.

பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற இலங்கை சுதந்திர ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பதினெட்டு ஆசிரியர் சங்கங்களும் 12 ஆம் திகதி முதல் இணைய வழியிலான கற்பித்தல் செயற்பாட்டை நிறுத்தி, பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத் திருந்தன.

இதற்கிடையில் இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தனிமைப் படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டமை அப்பட்டமான மனித உரிமை மீறல் எனத் தெரிவித்து, ஐநா மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட்டுக்குக் கடிதம் மூலமாக முறையிடப் பட்டிருந்தது. மேலும் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தியவர்களை  சட்டத்திற்கு முரணான வகையில் தனிமைப் படுத்தல் நிலையத்தில் தடுத்து வைத்ததைச் சுட்டிக் காட்டி, அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் 6 வழக்குகள் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கொத்தலாவலை தேசிய பாதுகாப்புப் பல்கலைக் கழகச் சட்ட மூலம் சொல்வதென்ன?

இலங்கைப் பல்கலைக் கழகங்களில் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் நெறிப் படுத்தலில் பல்வேறு பாட நெறிகளில் மாணவர்களுக்குப் பட்டக் கல்வி புகட்டி, பல்வேறு பட்டங்கள் வழங்கப் படுகின்றன. இதற்கு மேலதிகமாக சட்டத் துறை, பொறியியல் துறை, பட்டயக் கணக்காளர் துறை மற்றும் பொது நிர்வாகத் துறை போன்றவற்றில் தனித் தனியான நிறுவனங்கள் கல்வியூட்டி பட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த அமைப்புக்கள் சிவில் அமைப்புக்களாக மாணவர்களுக்கு முறை சார்ந்ததொரு கல்வியைப் புகட்டுகின்றன.

ஜோசப் ஸ்டாலின் விடுதலைஆனால் கொத்தலாவலை தேசிய பாது காப்புப் பல்கலைக் கழகமானது இராணுவத் துறை சார்ந்து இராணுவத்தின ருக்காகவே உருவாக்கப் பட்டது. அதனைத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பான வகையில் இராணு வக் கல்வி சார்ந்த முறையில் பல துறைக ளிலும் பட்டங்களை வழங்கு வதற்கான சட்ட மூலத்தை நிறை வேற்று வதற்கு அரச தரப் பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு பாட நெறிகளில் கல்வி போதிக்கப் படுகின்றது. குறிப்பாக மருத்துவத் துறையில் பயின்றுள்ள பல மாணவர்களுக்கு அரச பொது வைத்திய சாலைகளிலும், போதனா வைத்திய சாலைகளிலும் உள்ளகப் பயிற்சி வழங்கப் படுகின்றது. உள்ளகப் பயிற்சியின் பின்னர் அவர்கள் குறிப்பிட்ட காலம் கட்டாயமாக இராணுவத்தில் வைத்தியர்களாகப் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை உண்டு.

அதே போன்று இராணுவ சேவையில் பயன்படுத்தப்படுவதற்காக வேறு வேறு துறைகளில் மாணவர்களுக்குக் கல்வி புகட்டி பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இது மொத்தத்தில் பல்வேறு துறைகளிலும் கல்விநெறி சார்ந்த அறிவையும், பயிற்சியையும் கொண்ட இராணுவ கட்டமைப்புக்கானதொரு பொறிமுறையாகும்.

இந்தக் கல்விப் பொறி முறையை சட்ட வலு கொண்ட கட்டண முறையிலான தனியார் கல்வித்துறைக் கட்டமைப்பாக மாற்று வதற்காகவே கொத்தலாவலை தேசியப் பல்கலைக் கழக சட்ட மூலத்தை, நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி நிறை வேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தில் இராணுவ த்திற்கே முன்னுரிமையும் முதன்மை நிலையும் அளிக்கப் பட்டிருக்கின்றது. இந்த நிலையில் கல்வித் துறையில் இராணுவத்தின் கைகளை ஓங்கச் செய்வது நாட்டின் இலவசக் கல்வி முறைக்குப் பாதகமாகவே அமையும் என்பதில் ஐயமில்லை.

இலவசக் கல்வியானது நாட்டின் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்கள் மட்டு மல்லாமல் நடுத்தர வருவாயைக் கொண்ட குடும்பங்களுக்கும் பெரிதும் பயன்பட்டு வருகின்றது. நீண்ட கால பாரம்பரியத்தைக் கொண்ட இந்தக் கல்வி முறைமையில் மாற்றம் கொண்டு வருவதற்கு முதலில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி யடைந்திருக்க வேண்டும். குறிப்பாக தனிநபர் வருமானமும், குடும்ப வருமானமும் முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும்.

ஆனால் ஏழு தசாப்த காலப் போக்கில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிப் போக்கைக் காணவில்லை. மாறாக வீழ்ச்சி நிலைமையிலேயே இருந்து வருகின்றது. அதிலும் தற்போதைய நிலையில் நாட்டின் பொருளாதாரமும், தனி நபரின் பொருளாதாரமும் மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பொருளாதாரத்தில் நாடு தோல்வி யடைந்த நாடாக மாறி வருவதாக அரசாங்க அமைச்சரே குறிப்பிடும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந் திருக்கின்றன. இத்தகைய சூழலில் இலவசக் கல்வி முறைமையை தனியார் துறை முறைமைக்கு மாற்றி அமைப்பது இளந் தலைமுறை யினருடைய கல்விக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேக மில்லை.

இதன் காரணமாகவே கொத்தலாவலை தேசிய பாதுகாப்புப் பல்கலைக் கழக சட்ட மூலத்திற்குக் கல்வித் துறை சார்ந்தவர்கள் மட்டு மல்லாமல், ஏனைய துறை சார்ந்தவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

தனிமைப்படுத்தலில் சட்ட மீறல்கள்

தனிமைப் படுத்தல் சட்டம், சட்ட முறைமையைக் கொண்டிருக்கின்ற போதிலும், அதனைப் பொலிசார் நடை முறைப்படுத்தி இருக்கின்ற முறைமைகளில் சட்ட மீறல்களும், அரசியலமைப்புச் சட்ட மீறல்களுமே இடம் பெற்றிருக்கின்றன.

சட்ட திட்டங்களுக்குப் பொதுமக்கள் பணிந்து நடந்து கொள்ள வேண்டும். சட்டங்களை மீறி நடப்பவர்கள் நீதிமன்றத்தின் ஊடாகத் தண்டிக்கப் படுவார்கள். இதுவே சட்டத்தின் நடைமுறை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இங்கு அரச தரப்பினர் மீதும், அரச ஆதரவாளர்கள் மீதும், அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் மீதும் சட்டம் பாய்வதில்லை. சாதாரண மக்கள் மீதும் அரச அதிருப்தியாளர்கள் மீதும் சட்டங்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கோவிட் 19 பெருந்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையில் சட்ட நடைமுறைகள் மிகப் பாரதூரமான முறையில் பாகுபாடாகப் பயன்படுத்தப்படுவதைக் காண முடிகின்றது. பெருந்தொற்றுத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதி மன்றத்தில் பிணை வழங்கப் பட்டவர்களை பொலிசார்  தனிமைப் படுத்தல் நிலையத்தில் தடுத்து வைத்துத் தண்டிப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும். இது அரசியல் அமைப்பின் படி அடிப்படை உரிமை மீறலும் ஆகும்.

சட்ட ரீதியாகப் பிணை வழங்கப் பட்டவர்களை சுகாதாரப் பணிப்பாளரின் சுற்று நிருபத்திற்கமைய தனிமைப் படுத்தல் நிலையத்தில் தடுத்து வைத்தோம் என்பது பொலிசாரின் கூற்று. ஆனால் நீதிமன்ற உத்தரவையும் மீறிய வகையில் எவரையும் தடுத்து வைப்பதற்கு பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்பட வில்லை. பொலிசார் சட்டத்தின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும்.

ஆனால் சுகாதாரப் பணிப்பாளரின் சுற்று நிருபத்திற்கு அமைய பிணை வழங்கப் பட்டவர்களைத் தடுத்து வைத்திருந்தோம் என்பது ஏற்புடையதல்ல. அந்த சுற்று நிருபம் என்பது சட்ட வலுவைக் கொண்டதோர் ஆவணமல்ல. இதனை சட்டத்தரணிகள் சங்கத்தினர் சுட்டிக் காட்டி, பொலிசாரின் எதேச் சதிகாரப் போக்கை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

அது மட்டு மல்லாமல் அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என கண்டறியப் பட்டவர்களையும், அவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டதனால் நோய்த் தொற்று அறிகுறிகளைக் கொண்டவர் களையுமே தனிமைப் படுத்தி வைக்க வேண்டும் என்பது சட்ட நியதி. ஆனால் பொலிசாரினால் தடுத்து வைக்கப் பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் நோய்த் தொற்று காணப்பட வில்லை. எனவே, சுகாதாரப் பரிசோதனையின் முடிவையும் மீறிய வகையிலேயே பொலிசார் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களைத் தனிமைப் படுத்தல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் பாதிக்கப் படுகின்ற ஒரு குடிமகனுக்கு அது தொடர்பிலான தனது கருத்தை வெளியிடுவதற்கு அரசியலமைப்பில் அடிப்படை உரிமை அளிக்கப் பட்டிருக்கின்றது. சட்டத்தையும், ஒழுங்கையும் நிலை நாட்டும் அதிகாரம் கொண்டிருக்கும் பொலிசாருக்கு இந்த அடிப்படை உரிமையை மீறிச் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுவது அரசியலமைப்பை மீறுகின்ற செயலாகும். அது தண்டனைக் குரிய குற்றமுமாகும்.

அது மட்டு மல்லாமல் குடிமகன் ஒருவருக்குக் கருத்து வெளியிடும் சுதந்திரமும் அரசியலமைப்பில் அளிக்கப் பட்டிருக்கின்றது. அதனை மீறுவதற்கு அரசாங்கத்தினாலும் முடியாது. அது அடிப்படை உரிமை மீறலும், அரசியலமைப்புச் சட்ட மீறலுமாகும். இத்தகைய பின் புலத்தில்தான் வலிந்து தனிமைப் படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் 16 ஆம் திகதி விடுதலை செய்யப் பட்டிருக்கின்றனர்.

தனிமைப் படுத்தல் சட்டத்தின் கீழ் நோய்த் தொற்று உள்ளவர்களை 14 நாட்கள் தடுத்து வைக்க வேண்டும் என்பது சட்டவிதி. ஆனால் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் 8 நாட்களில் அதாவது 16 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். இது பொலிசாரின் நடவடிக்கை சட்ட விரோதமானது என்பதை நிரூபித்துள்ளது.

அத்துடன் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராகப் பல தரப்பினரும் யாழ்ப்பாணம் உட்பட நாடெங்கிலும் கிளர்ந்தெழுந்து நடத்திய போராட்டத்தை யடுத்து, பொலிசாரின் எதேச் சதிகாரப் போக்கைக் கைவிட்டு தடுத்து வைக்கப் பட்டவர்களை அரசாங்கம் விடுதலை செய்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. இந்த விடுதலை குறித்து அரச தரப்பில் இருந்து விளக்கம் அல்லது கருத்து எதுவும் உடனடியாக வெளியாக வில்லை. அதனால், இது அரசாங்கம் தனது தவறை உணர்ந்து செயற்பட்டதைக் குறிக்கின்றதா அல்லது நாடெங்கிலும் கிளர்ந்த போராட்டத்திற்கும் சர்வ தேசத்திற்கும் அஞ்சி செயற்பட்டதைக் குறிக்கின்றதா என்பதை உடனடியாக வரையறுத்து கூற முடிய வில்லை.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply