இலங்கையை கொரோனா 4ம் அலை தாக்கலாம் -மருத்துவ சங்கம்  எச்சரிக்கை

156 Views

padma gunaratne இலங்கையை கொரோனா 4ம் அலை தாக்கலாம் -மருத்துவ சங்கம்  எச்சரிக்கை

இலங்கை கொரோனா தொற்றின் நான்காவது அலையின் ஆரம்பத்தை நெருங்கி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம்  எச்சரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை மாத்திரம் நம்பி முன்னோக்கிச் செல்வது சாத்தியமில்லை எனவும் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை நாட்டில் நூற்றுக்கு 8 சதவீதமானோருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது எனவும் டெல்டா கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதாகவும், நாடு இப்போது நான்காவது அலையின் விளிம்பில் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply