ஈழத்துத் தமிழ் இளையோர் ஆற்றல் எந்த அளவுக்கு வளர்க்கப்படுகின்றது? – சூ.யோ. பற்றிமாகரன்

தமிழ் இளையோர் ஆற்றல் ஈழத்துத் தமிழ் இளையோர் ஆற்றல் எந்த அளவுக்கு வளர்க்கப்படுகின்றது? - சூ.யோ. பற்றிமாகரன்ஈழத்துத் தமிழ் இளையோர் ஆற்றல் எந்த அளவுக்கு வளர்க்கப்படுகின்றது? – சூ.யோ. பற்றிமாகரன்

யூலை 04. லை 15இல் உலக இளையோர் நாள் உலகெங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  கோவிட் 19 தொற்றுக் காரணமாக 2020 மார்ச்சில் இருந்து 2021 மே வரை முப்பது வாரங்கள் உலகெங்கும் பள்ளிகள் மூடப்பட்டிருந்துள்ளன. யூன் கடைசியில் 19 நாடுகளில் பள்ளிகள் முழுதுமாக மூடப்பட்ட நிலை காணப்படுகிறது. இது 157 மில்லியன் பேருடைய முழுநேரப் படிப்பையும் 768 மில்லியன் பேருடைய பகுதி நேரப் படிப்பையும் பாதித்துள்ளது. கல்விக்கும், பண்பாட்டுக்கும் அறிவியலுக்குமான ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பும், உலக வங்கியும், அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பும் ஒருங்கிணைந்து மேற் கொண்ட ஆய்வுகளில் தொலைக் கல்வி மூலமே இளையோர்களுக்கும், வயது வந்தவர் களுக்குமான ஆற்றல்கள் மீளவும் கட்டியெழுப் பப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது.

ஈழத்துத் தமிழ் இளையோர் ஆற்றல்இந்நிலையில் ஈழத்துத் தமிழ் இளையோர்க ளுடைய ஆற்றல்களை மீளவும் கட்டி யெழுப்ப புலம்பதிந்து வாழும் தமிழர்கள் தங்கள் நிதி வளத்தையும், மதி வளத்தையும் தொழில் நுட்ப அறிவியல் திறன் வளத்தையும் எந்த அளவுக்கு எப்படி ஒரு திட்டமிட்ட வகையில் ஒருங்கிணைக்கப் பட்ட திட்டங்கள் மூலம் முன்னெடுக்கப் போகின்றார்கள்? என்ற வினா எழுகிறது.

ஈழத்துத் தமிழ் இளையோர் ஆற்றல் எந்த அளவுக்கு வளர்க்கப்படுகின்றது?

சிறீலங்கா, ஈழத்துத் தமிழ் இளையோர்க்கான ஆற்றல்களைத் தாங்களே கட்டி யெழுப்புவோம் என்னும் முன்னெடுப்புடன், உலக நாடுகளிலும், அமைப்புக்களிலும் இருந்து பெறப்படக் கூடிய நிதி உதவிகளையும், பொருள் உதவிகளையும் பெற்று, ஈழத்துத் தமிழ் இளையோருக்குப் பயன் படுத்தாது, அது தனது பொருளாதார நெருக்கடிக்கும் ஆயுதக் கொள்வனவுக்கும் பயன் படுத்துவதை புலம் பதிந்த தமிழர்கள் எவ்வாறு உலகுக்குச் சான்றா தாரங்களுடன் தெரியப்படுத்தப் போகிறார்கள். இதற்கான புலனாய்வு ஊடகப் பலத்தை புலம் பதிந்த தமிழர்கள் ஏற்படுத்தினாலே இந்தச் சிக்கலான பிரச்சினைக்கு ஓரளவுக்குத் தீர்வு கிடைக்கும். அத்துடன் இதனை சமூக ஊடகங்கள் மட்டுமல்ல திரள் நிலை ஊடகங்களும் செய்தாலே உண்மை நிலைகள் உலகறிந்த நிலைகளாகும்.

ஈழத்துத் தமிழ் இளையோர் ஆற்றல்மேலும் இன்றைய கல்வித் தொழில் துறையின் சமகாலப் பிரச்சினை களுக்கான மாற்றுப் பொருளாதார முறைமையாக எவ்வாறு ஈழத் தமிழ் இளையோர் க்கான தொலைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நுட்பப் பயிற்சி அமைப்புக்களைப் புலம் பெயர் தமிழர்கள் உருவாக்கப் போகின்றார்கள். அவற்றை எவ்வாறு ஒருங்கிணைந்த உலகத் தமிழர் கல்வி தொழில் நுட்ப தொலைக் கல்வி அமைப்புக ளாக உறுதிப் படுத்தப் போகின்றார்கள்?

உரோம் எரிகையில் பிடில் வாசித்த நீரோ மன்னனின் கதையாக இன்றைய ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரச் சிக்கல்களைத் தங்கள் நிதி வளத்தையும் அதிகார பலத்தையும் பெருக்கு வதற்கான தளங்களாகப் பயன்படுத்து வோரிடம் இருந்து எவ்வாறு இலாப நோக்கமற்ற மக்கள் கல்வி தொழில் நுட்ப அறிவியல் அமைப்புக்களை மீட்டெடுத்து சமூக சிந்தனையும் இலாப நோக்குமற்ற அமைப்புக்களாக அவற்றை உருமாற்றம் செய்யப் போகின்றார்கள்?. தமிழர் கல்வி தொழில் நுட்ப அறிவியலில் அக்கறை கொண்ட ஆர்வம் கொண்ட பங்காளிகளாக உள்ள அனைவரையும் உள்ளடக்கிய உலகத் தமிழர் கல்வி தொழில் நுட்ப அறிவியல் அறிவுத் துணை வழங்கு தமிழர் அமைப்பு ஒன்றை உருவாக்க உழைத்தலின் மூலமே இவற்றை நடை முறைப்படுத்த இயலும் என்பதை ஒவ்வொரு புலம் பதிந்த தமிழரும் நெஞ்சிருத்தி உழைத்தல் அவசியம்.

இதற்கிடை இளையோர்க்கான வேலை வாய்ப்புக்கள் 2020 இல் 8.7 வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பெரியோர்க்கான வேலை வாய்ப்புக்கள் 2020 இல் 3.7 வீதமே வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தப் புள்ளி விபரம் உலகளாவிய நிலையில் இளையோர்க்கான வேலையின்மை பெருமளவில் அதிகரித்துள்ளதை எடுத்து விளக்குகின்றன. இந்த சமகால நிலை ஈழத் தமிழ் இளையோர்களைப் பொறுத்த மட்டில் சிங்கள பௌத்த இனவாத சிறீலங்கா அரசாங்கத்தால் மேலும் மோசமாக்கப்படும் என்பது வெளிப் படையான உண்மை.

இந் நிலையில் ஈழத் தமிழ் இளையோர்க்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்கு தலும் ஈழத் தமிழ் இளையோர் வெளிநாடுகளுக்குப் போகாது அங்கேயே தங்கி வேலை பெற முடியும் என்னும் நம்பிக்கையை அவர்களிடை வளர்ப்பதும்,  அவர்களு டைய திறன்களை அவர்கள் விரும்பியவாறு தங்கள் தாயக மண்ணிலேயே வளர்ப்பதற்கான சூழ்நிலைகள் எந்த அளவுக்குப் புலம் பதிந்த தமிழர்களால் அங்கு உருவாக்கப்படு கிறதோ அந்த அளவிலேயே தங்கியுள்ளது.

ஈழத்துத் தமிழ் இளையோர் ஆற்றல்இதற்கு அதிக அளவில் நிதியங்களும் அறிவி யல் தொழில்நுட்ப புத்திஜீவிகள் இணைப்பும் ஈழத்துத் தமிழ் இளையோர்க்கு ஏற்படுத்தப் படல் வேண்டும். இந்த முயற்சிகளை தடுக்கக் கூடிய முறையில் சிறீலங்கா எந்த தனது படை அணிகளுக்கும் அதன் தலைமைகளுக்கும் ஈழத் தமிழின அழிப்பையே சிங்கள பௌத்த வளர்ச்சிக்கான வழிகள் எனப் படிப்பித்துப் பயிற்சி அளித்து வைத்துள்ளதோ அவர்களி டம் தனது ஆட்சியின் நிர்வாகத்தை ஒப்படைத் துள்ளமை தடுக்கும் என்பது வெள்ளி டைமலை.

யேர்மனியில் முன்பு கிட்லர் தனது படை பல நிர்வாகத்தைப் பாராளுமன்ற முறைமைக்கு ஊடாக மக்கள் நிர்வாகத்தில் அமர்த்தி, தனக்கான சர்வாதி காரத்தை உருவாக்கிக் கொண்டது போல கோத்தபாய, மகிந்த, பசில் இராசபக்ச முக் கூட்டணியும் தமது குடும்ப ஆட்சிக்கான சர்வாதிகாரப் பலத்தைச், சிறீலங்காவில் ஈழத் தமிழின அழிப்பினைத் தங்கள் வழி காட்டலில்  முன்னெடுத்த அதே படையணித் தலைமைகளை ஈழ மக்களின் மேலான நிர்வாகத்தின் தலைமைகளாக்கி வளர்த்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான நிலையில் ஈழத் தமிழ் இளையோருடைய திறன் வளர்ச்சிக்கென புலம் பதிந்த தமிழர்கள் இலங்கைத் தீவில் செய்யும் எந்த உதவி களையும் பயங்கர வாதத்தை வளர்ப்பதற்கான முயற்சி எனவும் விடுதலைப் புலிகளை மீளவும் ஒருங்கிணப்பதற்கான முயற்சி எனவும் மாற்றி, ஆதரவு வழங்கப்படும் இளையோ ரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாக்கி அவர்கள் வாழ் வினை அழிக்கும் என்பது மற்றொரு வெளிப் படையான உண்மை.

இந்தச் சிறீலங்காவின் அரச பயங்கரவாதச் சூழலில் புலம் பதிந்த தமிழர்கள் உலக நாடுகள் அமைப்புக்களை, ஈழத் தமிழ் இளையோர்க்கான கல்வி, தொழில் நுட்ப, அறிவியல் வளர்ச்சிகளை வளர்ப்பதற்கான தங்களின் மூலதன முதலீடுகள் கல்வி தொழில்நுட்ப அறிவியல் அமைப்புக்கள் ஆகியவற்றின் பங்கேற்பாளராக கட்டமை த்துக் கொண்டாலே சிறீலங்காவின் ஈழத் தமிழர்களை அறியாமைக்குள்ளும், வறுமை க்குள்ளும் தள்ளி அவர்களை அடிமைப் படுத்தும் முயற்சிகளை தடுத்து நிறுத்த முடியும்.

“ஈழத்து இளையோர் திறன்கள் வளர்’
இவற்றை நடைமுறைச் சாத்தியமாக்க ஐந்து முக்கியமான விடயங்களில் புலம் பதிந்த தமிழர்கள் இணைந்து செயற்பட வேண்டும்.
  1. ஈழத்தில் உள்ள தமிழ் இளையோரின் திறன்கள் குறித்த பட்டியலைத் தயாரி த்தல்.
  2. இவர்களுடைய திறன்களை இன்றைய சந்தைகளின் வளர்ச்சிகளுடன் இணைத்து இவர்களுக்கான நிதிவளத்தையும், மதி வளத்தையும், தொழில் நுட்ப வளத்தையும் இவர்கள் பெறச் செய்வதற்கான வர்த்தகச் சந்தைப்படுத்தல் கட்டமைப்புக்களை உருவாக்குதல்.
  3. தங்களுடைய ஈழத்து இளையோர் களுக்குப் புலம் பதிந்து வாழும் தமிழர்கள் தமது மூலதன அறிவியல் தொழில் நுட்ப வளத்தைப் பகிர்ந்து அளிப்பதற்கான ஆக்க பூர்வமான நிதிக் கட்டமைப்புக்களை அமைத்து ஊக்கங்களையும் அளித்தல்.
  4. உலக கல்வி, தொழில் நுட்ப, அறிவியல் வளர்ச்சிக்கான திட்ட மிடல்களிலும் மனித வள, பொருள்வள, அறிவாற்றல் சக்திவள, நகர்வுகளிலும் ஈழத் தமிழ் இளையோர்கள் திறன்கள் குறித்த அக்கறைகளும், ஆர்வமும் ஏற்பட தமிழ ர்களின் ஊடக மற்றும் சமூக ஊடகச் செயற்பாடு களைக் கட்டி யெழுப்பி வழி நடத்தல்.
  5. தாயகத்தில் உள்ள தமிழ் இளையோர்க்கு அவர்களால் தாயக மண்ணில் தரமும் வளமும் உள்ள வாழ்வை அரச உதவியின்றியும், உலகத் தமிழினத்தின் உதவி யுடன் அமைத்து வாழ முடியும் என்பதை அவர்கள் நடைமுறையில் நம்பிக்கை யுடன் ஏற்கக் கூடிய வகையில் உலகத் தமிழினத்தின் எல்லா வளங்களுடனும் அவர்களும், வளங்களின் பங்காளர்களும், இணையக் கூடிய செயற் திட்ட ங்களை உருவாக்கி வளர்க்க வேண்டும்.

இவ்வாறு சரியானதைச் சரியான முறையில் சரியான நேரத்தில் செய்து உலகத் தமிழினத் திறன்களும் ஈழத்தமிழ் இளையோர் திறன்களும் இணைப்புற்று, உரிய முறையில் உரிய காலத்தில் உரிய வளர்ச்சி பெற இலக்கு “ஈழத்து இளையோர் திறன்கள் வளர்’ தளமொன்றை புலம்பதிந்து வாழும் இளைய தமிழர்கள் வழி உருவாக்க வேண்டும். அதற்கான நிதியும் மதியும் அனுபவமும் உள்ள புலம் பதிந்து வாழ் திறனாளர்கள் உடைய வழி காட்டலிலும் நிதிமதி அளிப்பு இணைப்புடனும் இவ் இணைப்பு வளர்த்தலைத் தனது இலக்காகக் கொண்டு இயன்ற வரை இதய உறுதியுடன் இலக்கு உழைத்திட வேண்டும்.

தமிழனால் ஆகாதது எதுவு மில்லை என்ற வரலாற்று உண்மையை ஆயிரமாண்டு கடந்தும் தமிழனால் மீள் உற்பத்தி செய்ய முடியும் என்கிற நம்பிக்கையுடனும் அதற்கான மூலதன மனிதவள தொழில் நுட்ப அறிவியல் திறன்கள்,  உலகத் தமிழர்களிடம் உண்டு என்கிற உறுதியுடனும், ஈழத்திலும், தமிழகத்திலும் தேசங் கடந்துறை மக்களாகவும் உள்ள  தமிழர்கள் தம்மால் இயன்றதைச் செய்வோம் என்னும் உறுதியினை 2021ஆம் ஆண்டு “உலக இளையோர் திறன்கள்”  நாளில் எடுத்திட இச்சிறு சிந்தனை உதவுவதாக.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021