வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், வவுனியா பிரதான தபால் அலுவலகத்திற்கு அருகாமையில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் 1700 வது நாளான இன்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது காணாமல் போனோரின் உறவுகளினால் அமெரிக்க, ஐரோப்பிய கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டித்தமை குறிப்பிடத்தக்கது. அதே நேரம் “காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் கடந்த 12 வருடங்களாக தொடர்ச்சியாக சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் குறித்த மக்களுக்கு நீதியை இது வரையில் இலங்கை அரசாங்கம் தரவில்லை. என மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.