ராஜீவ்  கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனின் பரோல் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ravichandran ராஜீவ்  கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனின் பரோல் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரனை, பரோலில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாகத் தமிழக அரசிடம் தகவல் பெற்றுத் தெரிவிக்க  உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரவிச்சந்திரனை பரோலில் விடுவிக்கக்  கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், ரவிச்சந்திரனை 2 மாதம் பரோலில் விடுவிக்க   உத்தரவிட வேண்டும் என அவர்  கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில், மனுதாரர் பரோல் வழங்குவதை சட்டபூர்வ உரிமையாகக் கேட்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு  மீண்டும் விசாரணைக்கு வந்த போது   ராஜேஸ்வரி மனு தொடர்பாகத் தமிழக அரசிடம் தகவல் கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஓகஸ்ட் 24-ம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ilakku-weekly-epaper-140-july-25-2021