இந்தியாவில் 8 மாநிலங்களில் அதிகரிக்கும் R எண்

161 Views

85022192 இந்தியாவில் 8 மாநிலங்களில் அதிகரிக்கும் R எண்

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் உக்கிரமாகப் பரவி வருகிறது என்றும் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்கு பரவுகிறது என்பதைக் குறிக்கும் R எண் எட்டு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது என்றும் இந்திய அரசு தெரிவிக்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோயாளர்களின் ண்ணிக்கை  42 ஆயிரமாக  அதிகரித்துள்ளது. 562 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து  குறித்த அமைச்சகம்  வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிகாக 42 ஆயிரத்து 625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 17 இலட்சத்து 69ஆயிரத்து 132ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 562 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 இலட்சத்து 25 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை நாட்டில் 48.52 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்றுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்கு பரவுகிறது என்பதைக் குறிக்கும் R எண் எட்டு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது என்றும் இந்திய அரசு தெரிவிக்கிறது.

இவற்றில் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களும் அடக்கம்.

இந்தியாவின் 44 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் விகிதம் அதிகரித்து வருவதுடன், டெல்டா திரிபால் அதிகரித்த பரவல் இன்னும் குறையவில்லை என்றும் இந்தியாவின் கோவிட் நடவடிக்கை குழுவின் தலைவர் வி.கே. பால் கூறியுள்ளார்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply