இரட்டைவாய்க்கால் -சாலை வீதியினை புனரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

234 Views

வீதியினை புனரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

இரட்டைவாய்க்கால்-சாலை வீதியினை புனரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை: முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான இரட்டைவாய்க்கால் சந்தியில் இருந்து  சாலை வரையான பதின்மூன்று கிலோமீற்றர் வீதியினை புனரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இந்த வீதி, நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையால்   பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே குறித்த வீதியினை மிக விரைவில் புனரமைத்து தருமாறு பொதுமக்கள் கோருகின்றனர். குறிப்பாக மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் சுமார் 400 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மாத்திரமின்றி குறித்த வீதியை பயன்படுத்தி விவசாயம் மற்றும்  மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்லும் பலரும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

salai iraddaivaaikal road issu 11 இரட்டைவாய்க்கால் -சாலை வீதியினை புனரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

இந்த வீதிதொடர்பில் பல ஆண்டுகளாக குரல்கொடுத்தும் தமக்கு எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சுமத்துகின்றனர். குறித்த வீதியினை மிக விரைவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கரிக்கட்டுமூலை வடக்கு வடடார உறுப்பினர் இ.கஜிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை குறித்த வீதி தொடர்பில் கருத்து தெரிவித்த வலைஞர்மடம் கமக்கார அமைப்பின் தலைவர் ஜோசெப் -செபமாலை, குறித்த இந்த வீதியானது மிக நீண்டகாலமாக திருத்தப்படாத நிலையில் காணப்படுகிறது நோயாளர்கள் பாடசாலை மாணவர்கள் விவசாயிகள் என பலரும் பாதிக்கப்படுகிறோம்” என்றார்.
ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad இரட்டைவாய்க்கால் -சாலை வீதியினை புனரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

Leave a Reply