யாழ்.மாதகல் பகுதியில் கடற்படைக்காக காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

236 Views

மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்ட காணி சுவீகரிப்பு

யாழ்.மாதகல் பகுதியில் மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்ட காணி சுவீகரிப்பு:  யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மாதகல் கிழக்கு ஜெ- 150 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 3 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள்   நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது.

இதையடுத்து அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டு நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad யாழ்.மாதகல் பகுதியில் கடற்படைக்காக காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

Leave a Reply