395 Views
உலக நாடுகளில் பரவத் தொடங்கியுள்ள ஒமக்ரான் கிருமி: புதிய ஒமக்ரான் (Omicron) வகை கிருமி, நெதர்லந்துத் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam), 13 தென்னாப்பிரிக்கப் பயணிகளிடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
2 விமானச் சேவைகளில் அங்கு சென்ற 61 பேருக்கும் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் அந்த 13 பேரும் அடங்குவர்.
ஜெர்மனியில் மூவருக்கும், டென்மார்க்கில் இருவருக்கும் Omicron வகை கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளது.
கனடா, அவுஸ்திரேலியா, ஹாங்காங் ஆகிய இடங்களிலும் Omicron நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.