அவுஸ்திரேலியாவின் NSW மாநிலத்தில் Omicron தொற்றுக்குள்ளான ஏழாவது நபர் இனங்காணப்பட்டார்

334 Views

அவுஸ்திரேலியாவின் NSW மாநிலத்தில் Omicron தொற்று

அவுஸ்திரேலியாவின் NSW மாநிலத்தில் Omicron தொற்றுக்குள்ளான ஏழாவது நபர் இனங்காணப்பட்டார்.

  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் Omicron தொற்றுக்குள்ளான ஏழாவது நபர் இனங்காணப்பட்டுள்ளார். இந்நபர் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு பயணம்செய்திருக்கவில்லை எனவும், ஆனால் குறித்த நபர் டோஹாவிலிருந்து சிட்னி வந்தபோது, விமானத்தில்வைத்து நோய் பரவியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
  • புதிய Omicron திரிபு உலகின் 23 நாடுகளில் இனங்காணப்பட்டுள்ள பின்னணியில், இதற்கெதிராக முழுமையான தடைகளை நடைமுறைப்படுத்துவது பரவலைத் தடுக்காது எனவும், மாறாக மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தின் மீது பெரும் சுமையையே அது ஏற்படுத்தும் எனவும், உலக சுகாதார அமைப்பின் Director-General Tedros Adhanom Ghebreyesus கூறியுள்ளார்.
  • தொற்றுநோய் தாக்கத்திற்கு இலகுவில் ஆட்படக்கூடியவர்கள், தமது பயணத்திட்டங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad அவுஸ்திரேலியாவின் NSW மாநிலத்தில் Omicron தொற்றுக்குள்ளான ஏழாவது நபர் இனங்காணப்பட்டார்

Leave a Reply