அதிக அபாயம் உள்ள நாடுகளிலிருந்து இந்தியா சென்ற மேலும் 4 பேருக்கு கோவிட்-19

380 Views

இந்தியா சென்ற மேலும் 4 பேருக்கு கோவிட்-19

இந்தியா சென்ற மேலும் 4 பேருக்கு கோவிட்-19: கிருமித்தொற்று அபாயம் அதிகம் உள்ள நாடுகளிலிருந்து புதுடெல்லி சென்றடைந்த மேலும் நான்கு பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லியின் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலைய அதிகாரிகள் இன்று (டிசம்பர் 2) இத்தகவலைத் தெரிவித்தனர்.

நள்ளிரவில் தரையிறங்கிய ஏர் ஃபிரான்ஸ் விமானத்தில் பயணம் செய்த மூவருக்கும் லண்டனிலிருந்து வந்த பயணி ஒருவருக்கும் கோவிட்-19 தொற்றியிருப்பது பரிசோதனைகளில் தெரியவந்தது.

அவர்களது பரிசோதனை மாதிரிகள் தேசிய நோய் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.

Leave a Reply