மாற்றுத்திறனாளிகளால் மகஜர் கையளிப்பு

448 Views

மாற்றுத்திறனாளிகளால் மகஜர் கையளிப்பு

மாற்றுத்திறனாளிகளால் மகஜர் கையளிப்பு: மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினையை தீர்க்குமாறு கோரி வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளான இன்று, மாற்றுத்திறனாளிகளான சாந்தகுமார், மக்கீன் முகமது அலி ஆகிய மாற்றுத்திறனாளிகளால் குறித்த மகஜர் இன்று (03) கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரில் பிரதேச வைத்தியசாலைகளில் மாற்றுத்திறனாளிகளின் சில தேவைகள் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது அவற்றை சீர்படுத்தல், மாற்றுத்திறனாளிகளிற்கான கொடுப்பனவு வழங்குவதில் ஒரு முறைமையை உருவாக்குதல், மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளின் கல்விக்கு உதவிசெய்தல், மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்கள் வழங்கல், அவர்களது உற்பத்தி பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பினை வழங்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த மகஜர் வழங்கப்பட்டது.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad மாற்றுத்திறனாளிகளால் மகஜர் கையளிப்பு

Leave a Reply