இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – தமிழில்: ஜெயந்திரன்

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு
பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து – தமிழில்: ஜெயந்திரன்

நியூசிலாந்து நாட்டில் வீடுகளில் குடிவரவு அதிகாரிகளால் திடீர் அதிகாலைச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 50 ஆண்டுகள் தற்போது நிறைவடைகின்றன. பசிபிக் (Pacific) மக்களின் தந்தையாகவும் அமைச்சராகவும் திகழ்கின்ற ஓப்பிற்றோ வில்லியம் சியோவினால் (Aupito William Sio) இன்றும் இவ்விடயம் பற்றிப் பேசுவது  சிரமமாகவே உள்ளது.

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு
Aupito William Sio

“உங்களைப் பராமரிக்க வேண்டியவர்கள், நீங்கள் சேவை செய்யும் உங்கள் அதிகாரிகள், இவர்களே உங்களை, உங்கள் சொந்த வீட்டில் வைத்து உங்களால் எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலைக்கு உங்களை இட்டுச் செல்லும் போது, இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை எப்படி ஒருவரால் பேசமுடியும்?” என்று சியோ கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலப் பகுதியில் தொழில் செய்வதற்காகப் பசிபிக் தீவுகளிலிருந்து நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்த மக்கள் மீது இந்த அதிகாலைச் சோதனைகள் 1970 களில் மேற்கொள்ளப் பட்டன.

குளிர் காலத்தில் ஒரு நாள் காலை, 1974ஆம் ஆண்டு, நாய்களால் சூழப்பட்டவாறு,  காவல் துறையினர் ஓக்லாண்டில் (Auckland) ஒட்டாறா (Otara) என்னும் இடத்தில் அமைந்திருந்த சியோவின் தந்தையின் காணியின் முன்கதவுக்கு வந்தார்கள். நியூசிலாந்தில் அவர்கள் எல்லோரும் சட்ட பூர்வமாகத் தங்கியிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் பொருட்டு ஒவ்வொருவரும் தத்தமது கடவுச்சீட்டைக் காண்பிக்க வேண்டும் என்று அவர்கள் பணிக்கப்பட்டார்கள்.

அந்த நேரம் நாய்கள் பலமாகக் குரைத்துக் கொண்டிருந்தன. அங்கிருந்தவர்கள் பயத்தினால் கூக்குரலிட்டார்கள். அதே வேளையில் மகிழுந்து தரிப்பிடத்தில் தங்கியிருந்த சியோவின் ஒன்றுவிட்ட சகோதரர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றார்கள். தமது உடைமைகளை எடுததுச் செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சமோவாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசுபோரின் காரணமாக பலவீனமடைந்திருந்த நியூசிலாந்தின் தொழிலாளரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பசிபிக் தீவுகளைச் சேர்ந்த பலர் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார்கள். 1976ஆம் ஆண்டளவில் நாட்டின் சனத்தொகையில் 2 வீதமானோர் பசிபிக் தீவுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் படி 65,700 பசிபிக் தீவினர் நியூசிலாந்தில் இருந்தார்கள்.

1970 களில் நாட்டில் ஏற்பட்ட பொருண்மிய நெருக்கடிகளின் காரணமாக, அப்போதைய தொழிற்கட்சி அரசு, குடிவரவாளர்களைக் கடுமையாக நடத்தத் தொடங்கியது. 1974க்கும் 1976ஆம் ஆண்டுக்கும் இடையில் பசிபிக் குடும்பங்கள் மீது மிக அதிக அளவில் இந்த சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இச்சோதனைகள் பெருமளவில் அதிகாலையில் அல்லது இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் இச்சோதனைகளின் போது கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்கள்.

பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு
ஜசிந்தா ஆடண்

7366 பேர் ஒப்பமிட்டு, ஆனி மாதம் நாடாளுமன்றித்தில் சமர்ப்பித்த ஒரு மனு உட்பட, இச்சமூகம் ஒன்றிணைந்து தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக மேற்கொண்ட கடும் முயற்சிகளின் பயனாக, நியூசிலாந்தில் வாழ்கின்ற பசிபிக் மக்கள் நடுவில் ஆழமான காயங்களைத் தோற்றுவித்திருக்கும் ஒரு கொள்கைக்காக அரசு முறைப்படி அந்த மக்களிடம் மன்னிப்புக் கோரும் என்று தலைமை அமைச்சர் ஜசிந்தா ஆடண் (Jacinda Ardern) அறிவித்தார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அன்று மன்னிப்பு கோருவதாக அரசு அறிவித்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட இனம் குறிவைக்கப்படும் நிகழ்வு நியூசிலாந்தின் வரலாற்றில் நடை பெற்றிருக்கிறது என்பதை நியூசிலாந்து அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சியோ சுட்டிக் காட்டினார். எமது மக்கள் வெட்கித் தலைகுனியும் வகையில் எமது மக்கள் மேல் திணிக்கப்பட்ட விலங்குகளை அகற்றும் செயற்பாட்டில் இது முதற்படி ஆகும்.

ஏற்கனவே நடந்து முடிந்த இப்படிப்பட்ட விடயங்களை சரியாக ஆய்வு செய்து அவற்றைப் புரிந்து அவற்றுக்காக நாம் வருந்தத் தவறுவோமாக இருந்தால், இதே விதமான செயற்பாடுகள் மீண்டும் ஒரு தடவை நடந்தேறலாம். நடந்த விடயங்கள் முற்றிலும் தவறானவை என்பதையும் இன்றும் அவை தவறானவை தான் என்பதையும் நாம் ஏற்றாக வேண்டும்.

குடிவரவுச் சட்டங்கள் அமுல் நடத்தப்பட்ட போது, இனப்பாகுபாடு காட்டப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை 1986 இல் விசாரித்த இன உறவுகளுக்கான ஒப்புரவாளர், இக்குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். முக்கியமாக 1985, 1986 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உரிய வதிவிட அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பசிபிக் தீவுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஆனால் உரிய அனுமதியின்றித் தங்கியிருந்தவர்கள் மேல் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவற்றில் 86 வீதமான சட்டநடவடிக்கைகள் பசிபிக் குடிமக்களை இலக்கு வைத்தது கண்டறிப்பட்டது. உரிய அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்தவர்களில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் மூன்றில் ஒரு பகுதியாக இருந்தார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் வெறும் 5 வீதமான சட்ட நடவடிக்கைகளே இவர்கள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டன.

பசிபிக் மக்களுக்கான அமைச்சின் தகவல்களின் படி 1974க்கும் 1976க்கும் இடையில் 5000க்கும் 12,000க்கும் இடைப்பட்டோர் இந்த இரு நாடுகளையும் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

ஏன், இப்போது?

இந்தச் சோதனைகள் மற்றும் கைதுகளின் காரணமாக பல பரம்பரைகளாகப் பசிபிக் மக்கள் அனுபவித்து வருகின்ற பாதிப்புகளை எந்தவொரு அதிகாரியும் கண்டு கொள்ளாததனாலும் பாடசாலைகளில் இவ்விடயம் பேசப்படாததன் காரணத்தாலும் விரக்தியுற்ற பெஞ்சி ரீமுவும் (Benji Timu) ஜோசியா துயாலாமாலியும் (Josiah Tualamali’i) குறிப்பிட்ட கோரிக்கையை வடிவமைத்து நாடாளுமன்றத்தில் யூன் மாதம் சமர்ப்பித்ததாக ரீமு அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார். தற்போது 27 வயதுடைய ரீமு கடந்த ஐந்து வருடங்களாகத் தனது அடையாளம் என்ன என்ற தேடலில் ஈடுபட்டு வருகிறார்.

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசுசமோவாவின் (Samoa) குக் தீவை (Cook Island) பிறப்பிடமாகக் கொண்ட, நியோ (Niuean descent) வம்சத்தைச் சார்ந்த ரீமு தனது கலாச்சாரம் சந்தித்த போராட்டங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறார். நியூசிலாந்தில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்காக தாம் தொடர்ந்து அனுபவிக்கும் வெட்கம் மற்றும் குற்றவுணர்வுகள் தொடர்பாகப் பலர் என்னோடு உரையாடியிருக்கிறார்கள். “புலம் பெயர்ந்து வாழும் பசிபிக் மக்களைப் பொறுத்த வரையில் பாக்கியம் பெற்றவனாக என்னை நான் பார்க்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.

இவ்விடயங்கள் பற்றிப் பாடசாலையில் எமக்கு எதுவுமே சொல்லித்தரப்படவில்லை என்பது விநோதமாகத் தான் இருக்கிறது. இனவாதத்தை எப்படி எதிர்ப்பது என்பது தொடர்பாக எந்தவிதமான அறிவூட்டலும் எனக்குத் தரப்படவில்லை. பாதிப்பு எப்பவோ ஏற்படுத்தப்பட்டது. அதன் வலி பல பரம்பரைகளாகக் கடத்தப்பட்டு வருகிறது. காவல் துறை மீதும் அரசு மீதும் காட்டப்படும் அவநம்பிக்கையாக அது வெளிப்படுகிறது. இன்னும் எத்தனையோ விடயங்கள் எமது மக்களை இன்னும் சமூகத்தின் அடிமட்டத்தில் வைத்திருக்கிறது. அது சமூகப் பொருண்மியமாக இருக்கலாம்,  கல்விநிலையாக இருக்கலாம். அல்லது நீதி பரிபாலனமாக இருக்கலாம். இழைக்கப்பட்ட தவறுகளைத் திருத்துவதற்கு மன்னிப்புக் கோருதல் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். தொடரும்….

அல்ஜசீரா