கொரோனா தொற்று சோதனைக்கு முன்பதிவு சென்னை விமான நிலையத்தில் அறிமுகம்

10THAIRPORT16931820211639245COVIDTESTATCHENNAIAIRPORT09JPG கொரோனா தொற்று சோதனைக்கு முன்பதிவு சென்னை விமான நிலையத்தில் அறிமுகம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணியருக்கும், வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணியருக்கும், கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இதற்காக விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தாண்டு ஜூலை வரை, 10க்கும் குறைவான சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது 15க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதனால், பயணியர் எண்ணிக்கை உயர்ந்து, கொரோனா பரிசோதனை மையங்களில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வரவும் நீண்ட நேரமாகின்றது.

இதைத் தவிர்க்க, ரேபிட் ஆர்.டி.பி.சி.ஆர்., முறை, இம்மாதம் 5ம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சோதனையில் 30 நிமிடங்களில் முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போது, பரிசோதனைக்கு முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் ட்விட்டர் பக்தத்தில், அதற்கான, க்யூ.ஆர்., கோடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், முன்பதிவு செய்யும் பயணியருக்கு நேரம் ஒதுக்கப்படும்.

உரிய நேரத்தில் அவர்கள் வந்து உடனடியாக சோதனையை மேற்கொள்ளலாம். இதனால், கொரோனா பரிசோதனைக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்

ilakku-weekly-epaper-141-august-01-2021