வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளாரின் நினைவேந்தல் இன்று

469 Views

IMG 20210814 WA0019 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளாரின் நினைவேந்தல் இன்று

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளாரின் 31 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நினைவு கூரப்பட்டது.

கிழக்கு மாகாண தொழில்நுட்ப கல்லூரியின் பணிப்பாளர் அருட்பணி த.ஜீவராஜ் அடிகளார் தலைமையில் குறித்த  நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளார், 1923 ஆம் ஆண்டு அமெரிக்காவில் லூசியா மாகாணத்தில் பிறந்து இயேசு சபை துறவியான இவர், 1941 ஆம் ஆண்டு தனது 17 வது வயதில் இயேசு சபை துறவியாக தன்னை இணைந்து கொண்டதுடன், இயேசு சபை ஆரம்ப குருத்துவ பயிற்சியை பெற்றதன் பின்னர் தன்னார்வ மறைப் பணியாளராக பணியாற்றுவதற்காக முன்வந்தார்.

IMG 20210814 WA0014 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளாரின் நினைவேந்தல் இன்று

இதையடுத்து, 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு அவர் வருகை தந்திருந்தார்.

மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் இயேசு சபை கல்லூரிகளில் பணியாற்றிய இவர், அதன் பின்பு 3 வருடங்கள் இந்தியாவில் உள்ள பூனா நகரத்தில் இறையியலை பயின்று,  பின்னர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு மீண்டும் இலங்கைக்கு வருகை தந்தார்.

1971 ஆம் ஆண்டு மட்டக்களப்பிலுள்ள கிழக்கிலங்கை தொழில்நுட்ப கல்லூரியில் இயேசு சபைத் துறவி அருட்பணி லோயிட் லோறியோ அடிகளாருடன் சக ஊழியராக பணியாற்றியுள்ளார்.

அதன் பின் தொடர்ந்து பல்வேறு வகையான சேவைகளை மக்கள் மத்தியில் ஆற்றிவந்த இவர், அதிலும் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றியிருந்தார்.

IMG 20210814 WA0017 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளாரின் நினைவேந்தல் இன்று

உரிமை மறுக்கப்பட்டு அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருந்து செயற்பட்டுள்ளார். குறிப்பாக கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு படுகொலைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கான அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றியதுடன் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் போராடினார். அத்துடன் தமிழர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பிலும் குரல் எழுப்பிவந்ததுடன் அது தொடர்பான சிவில் சமூக செயற்பாட்டாளராகவும் அருட்பணி லோயிட் லோறியோ இருந்து வந்தார்.

1985 – 1990 வரை கிழக்கு மாகாண தொழில்நுட்ப கல்லூரியின் இயக்குனராக பணியாற்றிய இவர், 1990 ஆம் ஆண்டு வாழைச்சேனைக்கு சென்று திரும்பும் வழியில் ஏறாவூர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply