இரவு, பகலும் தங்களது பெற்றோர்களுடன் உலகின் ஏதாவது ஒரு முனையில் அகதியாக செல்லும் இளம் குழந்தைகளின் அடையாளமாக மாறியிருக்கிறாள் அமல்.
குழந்தை அகதிகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமல் என்ற சிறுமி வடிவலான பொம்மையை Handspring Puppet Company வடிவமைத்துள்ளது. சுமார் 3.5 மீட்டர் உயரம் கொண்ட அமல், துருக்கி – சிரியா எல்லையிலிருந்து மான்செஸ்டர்வரை நடந்தே பயணம் செய்ய இருக்கிறாள்.
அதாவது சுமார் 8,000 ஆயிரம் கிலோ மீட்டர். ஜூலை மாதம் தனது பயணத்தை தொடங்கிய அமல் நவம்பர் மாதம் நிறைவு செய்கிறாள். தான் பயணம் செய்யும் 8 நாடுகளின் கலாச்சார விழாக்களிலும் அமல் பங்கேற்று வருகிறார்.
அமல் தனது பயணத்தை முடிக்கும் தினத்தில் விழாகவாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சிரியா, துருக்கியைச் சேர்ந்த கலைஞர்கள் கலந்து கொண்டனர். அமல் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கரோனா பரவலைத் தடுக்க தனிமனித இடைவெளியும், தனித்திருத்தலும், சுகாதாரமான வாழ்நிலையும் அவசியம். ஆனால் பல நாடுகளின் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சுகாதாரமான வாழ்நிலையே இல்லை எனலாம். சிறிய கூடாரத்திற்குள் ஒரு குடும்பம் என்பதாக உள்ளனர்.
தனிமனித இடைவெளியும், தனித்திருத்தலும் சாத்தியமற்றதாக உள்ளது. அவர்களின் வேலையும் குறைந்தபட்ச வாழ்வாதாரமும் மோசமாக இந்தக் கரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்ளவேண்டுமென்று தொழிற்சங்கங்களின் சர்வதேசக் கூட்டமைப்பு (World Federation Of Trade Unions) வலியுறுத்தியுள்ளது.