இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – மொழியாக்கம்: ஜெயந்திரன்

(சென்ற வாரத் தொடர்ச்சி)

பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து பகுதி II

பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து பகுதி II

இனவாத அணுகுமுறைக்காக பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து அரசு – மொழியாக்கம்: ஜெயந்திரன்

ஏன், இப்போது?

இந்தச் சோதனைகளின் காரணமாக பல பரம்பரைகளாகப் பசிபிக் மக்கள் அனுபவித்து வருகின்ற பாதிப்புகளை எந்தவொரு அதிகாரியும் கண்டு கொள்ளாததனாலும், பாடசாலைகளில் இவ்விடயம் பேசப்படாததன் காரணத்தாலும் விரக்தியுற்ற பெஞ்சி ரீமுவும் (Benji Timu) ஜோசியா துயாலாமாலியும் (Josiah Tualamali’i) குறிப்பிட்ட மனுவைத் தயார்செய்து நாடாளுமன்றத்தில் யூன் மாதம் சமர்ப்பித்ததாக ரீமு அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார்.

Benji Timuநியூசிலாந்தின் ஐந்து மில்லியன் சனத்தொகையில் 8.1 வீதத்தினர் பசிபிக் தீவுகளைச் சேர்ந்த மக்கள் ஆவார். 2013ஆம் ஆண்டுக்கான தேசிய புள்ளிவிபரங்கள் இந்த மக்களின் சராசரி வருடாந்த வருமானம் 8800 நியூசிலாந்து டொலர்கள் எனக்கணிப்பிடுகின்றன. இது நாட்டின் சராசரி வருமானத்தை விடக் குறைவானதாகும். 2012-2014 ஆண்டுகளில் பெறப்பட்ட புள்ளிவிபரத் தகவல்களின் படி 28 வீதமான பசிபிக் பிள்ளைகள் வறுமை தாண்டவமாடும் வீட்டுச் சூழல்களில் வாழ்ந்தார்கள். அதேவேளையில் 16 வீதமான ஐரோப்பிய பூர்வீகத்தைக் கொண்ட பிள்ளைகளே வறுமைச் சூழலில் வாழ்ந்திருக் கிறார்கள்.

குறிப்பிட்ட காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு மரியாதை செய்யவும், அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஏற்றுக்கொள்ளவும், அவர்களுக்குப் பண உதவியை வழங்குவதற்காகவும், நிதி ஒதுக்கப்படவேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்ட மனு வேண்டு கோள் விடுத்தது.

பசிபிக் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனைகளாலும், பசிபிக் மக்களை இழிவு படுத்துவதற்கென்றே அரசினால் அங்கீகரிக்கப்பட்ட இனவாதப் பிரச்சாரங்களின் காரணமாகவும் இழைக்கப்பட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கோருதல் அரசைப் பொறுத்த வரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த போதிலும், மன்னிப்புக் கோருவது மட்டும் போதாது என்று ஓக்லான்ட் பல்கலைக்கழக சட்ட விரிவுரை யாளரான டிலான் ஏசபோ அல்ஜசீராவுக்குத் தெரிவித்தார்

மாற்றம் அவசியமானது

Dylan Asafo

Dylan Asafoநியூசிலாந்தைப் பொறுத்தவரையில் இனவாதமே அதன் குடிவரவுக் கொள்கைகளை மறைமுகமாக நெறிப் படுத்துகின்றது என்று ஓக்லான்ட் பல்கலைக் கழக சட்ட விரிவுரை யாளரான டிலான் ஏசபோ (Dylan Asafo) அல்ஜசீ ராவுக்குத் தெரிவித்தார்.

பசிபிக் மக்களுக்கும் வெள்ளை யினத்தவர் அல்லாத ஏனைய இனத்தவர்களுக்கும் நியூசிலாந்தில் நிரந்தர வதிவிட உரிமையைப் பெறுவதற்கான எந்தவிதமான தெளிவான வழிவகைகளும் முன்வைக்கப் படவில்லை. நியூசிலாந்தின் பொருண்மியத்தை வளப்படுத்தக் கூடியவர்கள் என்று நம்பப்படுகின்ற விருத்தியடைந்த, வெள்ளையினத்தவர் வாழ்கின்ற நாடுகளைச் சேர்ந்தவர் களுக்காகவே குடிவரவுக் கட்டமைப்பு வடிவமைக்கப் பட்டிருக்கின்றது. அதே நேரம் வெள்ளை யினத்தவர்கள் அல்லாதவர்கள் அனைவரும் பொருண்மியத்தைப் பொறுத்த வரையில் சாதகமற்ற முறையிலேயே நோக்கப்படுவது மட்டுமன்றி, குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகும் தற்காலிக வதிவிட அனுமதிகளே அவர்களுக்கு வழங்கப் படுவதோடு அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஏனைய உரிமைகளும் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து பகுதி II‘அங்கீகரிக்கப்பட்ட பருவகால தொழில் வழங்குநர் திட்டம்’ 2007 இல் அறிமுகப் படுத்தப் பட்டு, குறிப்பிட்ட பருவ காலங்களில் விவசாய வேலைகளுக்காக தொழிலா ளர்களை உள்வாங்கு வதற்காக வடிவமை க்கப்பட்டது. இதன் பொருள் என்னவென்றால், பசிபிக் தீவுகளைச் சேர்ந்தவர்கள் இத்திட்ட த்துக்கு விண்ணப் பிக்கலாம். ஆனால் அவர்களுக்கு மிகவும் குறைவான ஊதியங்கள் வழங்கப்படுவது மட்டு மன்றி, நியூசிலாந்து நாட்டுக்கு மிகவும் பெறுமதியான விதத்தில் பங்களிக்கும் இம்மக்களுக்கு இந்நாட்டில் நிரந்தரமாக வாழ்கின்ற உரிமை மறுக்கப்படுவது மட்டுமன்றி, தமது சொந்த நாடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறும் அவர்கள் வற்புறுத்தப் படுகிறார்கள் என்று ஏசபோ மேலும் கூறினார்.

பாதுகாப்பில்லாத சூழ்நிலைகளில் பணியாற்ற பசிபிக் மக்கள் கட்டாயப்படுத் தப்படுகிறார்கள். தொழில்களுக்குப் பொருத்தமான கருவிகளாக மட்டும் அவர்கள் பார்க்கப்படுகிறார்கள். வேலை முடிந்ததும் அவர்கள் தூக்கியெறியப் படுகிறார்கள். அந்த மக்களின் மாண்பை இந்தக் கட்டமைப்பு குழிதோண்டிப் புதைக்கின்றது என்று அவர் கவலையுடன் தெரிவித்தார்.

இனவாதத்தோடு கூடிய ஒரு முரண்நிலை இங்கே காணப்படுகிறது. பன்னாட்டு ரீதியாக நாங்கள் பசிபிக்கின் ஒரு பகுதியாகவும் அதே வேளை நியூசிலாந்தின் அயலவர்களாகவும் பார்க்கப்படுகிறோம். அதே நேரம் குடிவரவுக் கொள்கைகளைப் பார்க்கும் போது, தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காகச் சுரண்டலுக்கு ள்ளாகின்ற இரண்டாந்தரக் குடிமக்களாகவே பசிபிக் மக்கள் கணிக்கப்படுகிறார்கள்.

யூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் 7000 பேர் ஒப்ப மிட்டிருந்தார்கள். இவ்விடயம் தொடர்பாக அரசு தனது அக்கறையை வெளிப்படுத்தி யிருக்கின்றது. இத்தவறுகளுக்காக அரசு கவலையையோ வருத்தத்தையோ வெளிப் படுத்தி யிருந்தாலும், கட்டமைக்கப்பட்ட ரீதியாக இழிவுபடுத்தப்படும் ஒரு மக்கள் இனத்தின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். பாதிப்புகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 2000 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் இம்மக்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது என்றும் மீண்டும் ஒரு தடவை மன்னிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று தலைமை அமைச்சர் ஆடேண் கூறியதாக குடிவரவு அமைச்சரான கிறிஸ் பாபோய் தெரிவித்தார்.

பசிபிக் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறது நியூசிலாந்து பகுதி IIஅங்கீகரிக் கப்பட்ட பருவகால தொழில் வழங்குநர் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக அரசு உறுதியாக இருக்கிறது என்பதோடு, அதிலே திருத்த ங்களை மேற்கொள்ளவும் நாங்கள் முடிவெடுத் திருக்கிறோம்.

வர்த்தகம், புத்தாக்கம், தொழில் வழங்குதல், போன்றவற்றுக்குப் பொறுப்பான அமைச்சினால் இத்திட்டம் தொடர்பான ஒரு மீளாய்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தொழில்களால் பெறப்படுகின்ற வருமானத்தில் கிடைக்க வேண்டிய பங்கு அவர்களுக்குக் கிடைக்கச் செய்யவும், நியூசிலாந்தின் தொழிலாளர்கள் இடப்பெயர்வுகளைச் சந்திக்கின்ற போது, அப்படிப்பட்ட பிரச்சினைகளை செயற்றிறன்மிக்க விதத்தில் கையாளக்கூடிய வகையில் நீதியான, வெளிப்படையான வகையில் தொழிலாளருக்கான நிதி ஒதுக்கப்படவும் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் அவர்களது சிறப்பான செயற்பாட்டை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீர்திருத்தங்கள் உரிய முறையில் அமுல்நடத்தப்படுவதை உறுதிப்படுத்தவும், தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைக் கணிசமான அளவு குறைப்பதற்கும் இம்மீளாய்வில் கவனம் செலுத்தப்படுகிறது. தம்மிடம் தொழில் புரியும் தொழிலா ளர்களுக்கு உரிய தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, தொழிலாளர்களைத் தொழில் வழங்குநர்கள் நல்ல முறையில் பராமரிப்பதை உறுதி செய்யவும் சீர்திருத் தங்கள் மேற்கொள்ளப் படுகின்றன என்று பாபோய் தெரிவிக்கிறார்.

அமைச்சர் சீயோ பின்வருமாறு கூறுகிறார்.  இக்குறிப்பிட்ட திட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மீளாய்வு செய்துகொண்டே இருக்கிறோம். அத்துடன் உள்நாட்டில் வாழும் சமூகத்திடமிருந்து புலனாய்வுத் தகவல்களை நாங்கள் திரட்டிக்கொண்டே இருக்கிறோம். இத்திட்டம் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி நான் அறிந்திருக்கிறேன். உண்மையில் இங்கே இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சுரண்டப்படும் விடயம்.

அதே நேரம் தொழில் வழங்குநர்களுடன் உரையாடும் போது அவர்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையையே சொல்கிறார்கள். அதே நேரம் உள்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்பதையும் நாங்கள் மறந்துவிட முடியாது. நியூசிலாந்தின் ஒரு முக்கிய சமூகத்தினருக்கு விடியற்காலைச் சோதனைகள் ஏற்படுத்திய தீங்கையும் உளவியல் ரீதியான பாதிப்பையும் நாம் ஏற்றுக்கொள்வது முக்கியமானது.

நல்ல குடிமக்களாக வாழும் நோக்கத்தோடு தான் அந்த மக்கள் இங்கே வந்தார்கள். ஆனால் அவர்களைப் பாதுகாக்க வேண்டியவர்களாலேயே அவர்கள் அநீதியாக நடத்தப்ப ட்டார்கள். தமக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைத் துணிவோடு எடுத்துச் சொல்ல அந்த மக்கள் முன்வர வேண்டும். ஏனென்றால் அப்படிச் சொல்வது அந்த மக்களுக்கு ஏற்பட்ட காயங்களைக் குணமாக்குகின்ற ஒன்றாக அமையும். உண்மையாக நடந்தது என்ன என்பதை நியூசிலாந்தில் வாழ்கின்ற ஏனையோருக்கும் தெரியப்படுத்த வேண்டும். விசேடமாக அரசியல்வாதிகள், காவல் துறையினர், குடிவரவு அதிகாரிகள் ஆகியோர் மூடிய கதவுகளுக்குள் எதனைப் பேசினார்கள் என்பது வெளிக்கொணரப்பட வேண்டும். அப்போது தான் இப்படிப்பட்ட விடயங்கள் மீண்டும் ஒரு தடவை நிகழாமல் தடுக்க முடியும்.

நன்றி: அல்ஜசீரா

ilakku-weekly-epaper-143-august-15-2021