பொது முடக்கம் – வவுனியா நகருக்குள் திரண்ட மக்கள்

482 Views

20210820 151731 பொது முடக்கம் - வவுனியா நகருக்குள் திரண்ட மக்கள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று இரவு முதல் நாடாளவிய ரீதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதையடுத்து அத்தியாவசியப் பொருட் கொள்வனவுக்காக வவுனியா நகருக்குள் மக்கள் அதிகளவில் வருகை தந்திருந்தனர்.

20210820 152602 பொது முடக்கம் - வவுனியா நகருக்குள் திரண்ட மக்கள்
இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 வரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக இன்று பிற்பகல் அரசாங்கத்தின் அறிவித்தல் வெளியாகிய நிலையில், அத்தியாவசிப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக  வவுனியா  நகர வர்த்தக நிலையங்களில் அதிகளவிலான மக்கள் வருகை தந்து முண்டியத்துக் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

20210820 152103 பொது முடக்கம் - வவுனியா நகருக்குள் திரண்ட மக்கள்

அரசி, மா, சீனி, பால் மா, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மரக்கறி வகைகள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகளவிலான மக்கள் வர்த்தக நிலையங்களின் முன்னால் நீண்ட வரிசையில் நின்றதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாலும் நீண்ட வாசையில் மக்கள் நின்று எரிபொருட்களைப் பெற்றுச் சென்றனர்.  இதனால் வவுனியா நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply