ஒரே நாளில் அதிக மரணங்கள்; நேற்று மட்டும் 195 பேர் பலி

519 Views

ஒரே நாளில் அதிக மரணங்கள்; நேற்று மட்டும் 195 பேர் பலிநாட்டில் நேற்று 195 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் பதிவான அதிக மரண எண்ணிக்கை இதுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.

அதற்கமைய, நாட்டில் பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,985ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 98 ஆண்களும் 97 பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply