ஓகஸ்ட் 21:பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி நாள்

439 Views

image 7cd7de6231 ஓகஸ்ட் 21:பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி நாள்

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி செலுத்தும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 21ம் நாளை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இன்றைய நாள் உலகளவில் நினைவு கூரப்படுகின்றது. மேலும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்நாள்  நினைவு கூரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவு நாள் என்பது, பொதுவாக உலக வல்லரசுகளின் பார்வையில் அனுசரிக்கக்கூடிய ஓர் சம்பிரதாய நாளாக இருக்கக் கூடாது.

ஏனெனில், பல வல்லரசு நாடுகள் தங்களின் அரசியல் பார்வையில், ஏழ்மையான அல்லது பின்தங்கிய நாடுகளில் இருக்கக் கூடிய சுதந்திரப் போராட்டங்களைக் கூட, பயங்கரவாதப் போராட்டமாக அடையாளப்படுத்தியிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டமும் அப்படியான அடையாளப்படுத்தலில் சிக்குண்ட ஓர் போராட்டமாக இருக்கின்றது. அந்த வகையில்,  தமிழீழ சமூகம், இலங்கை அரச பயங்கர வாதத்தால்  பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாகும்.

இச் சமூகத்தின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதத்தின்  கீழ் கொண்டு வரும் முயற்சிகளை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். இந்த தினத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைின் வழியே அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் தமிழ் சமூகத்தின் தாங்கொணா இன்னல்களை நினைவு கூருவோம்.

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply