வட கொரியா மீண்டும் புதிய ஏவுகணை பரிசோதனை

397 Views

மீண்டும் புதிய ஏவுகணை பரிசோதனை

வட கொரியா மீண்டும் புதிய ஏவுகணை பரிசோதனை

விமானத்தை தாக்கி அழிக்கும் புதிய ரக ஏவுகணையை வியாழக்கிழமை பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது.

கடந்த ஒரு மாத காலத்துக்குள் வட கொரியா நடத்திய நான்காவது ஏவுகணை பரிசோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஏவுகணை சிறப்பாக செயல்பட்டதாகவும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதாகவும் வட கொரியாவின் அரசு ஊடகமான கே சி என் ஏ குறிப்பிட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கும் போதும், வட கொரியா தன் ஆயுத மேம்பாட்டை குறைக்கும் எண்ணத்தில் இல்லை என்பதையே சமீபத்தைய ஆயுத பரிசோதனைகள் காட்டுகின்றன. தென் கொரியா உடனான ஹாட்லைன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இப்படிப்பட்ட ஏவுகணை பரிசோதனைகள் நிலையற்றதன்மை மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்குவதாக அமெரிக்காவின் உள்துறை செயலர் அந்தோனி ப்ளிங்கன் கூறினார். ஆனால் வடகொரியாவோ தற்காப்புக்கு ஆயுதங்கள் தேவை என கூறியுள்ளது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply