எக்வடோர் சிறைக் கலவரம்116பேர் பலி

585 Views

எக்வடோர் சிறைக் கலவரம்116பேர் பலி

எக்வடோர் (Ecuador) சிறை கைதிகளில் இரு போட்டி குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையில் குறைந்தது 116 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான சிறை வன்முறை இது என கருதப்படுகிறது.

குவாயாகுவில் நகரிலுள்ள மண்டல சிறைச்சாலையில் இரு குழுக்களைச் சோ்ந்த கைதிகளிடையே கடந்த செவ்வாய்க்கிழமை கலவரம் வெடித்ததில் கைதிகள் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனா் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 116 ஆக உயா்ந்துள்ளது.  இந்தக் கலவரத்தில் மேலும் 80 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தற்போது சிறைத் துறை அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதால், சிறைச் சாலைக்குள் சிறைத் துறை அதிகாரிகள் மட்டுமன்றி  காவல்துறை மற்றும் இராணுவத்தினரை பாதுகாப்புப் பணிக்கு நிறுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஈக்வடாரின் 3 சிறைகளில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரே நேரத்தில் நடைபெற்ற கலவரத்தில் 79 கைதிகள் கொல்லப்பட்டது நினைவு கூரத்தக்கது.
ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply