முல்லைத்தீவு- ஆனந்தபுரத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை நாளை

264 Views

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தனியார் காணி ஒன்றைத் தோண்டிய போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை நாளை (12) முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனந்தபுரத்தில் தனியார் காணியொன்று தோண்டப்பட்ட போது, மண்டையோடும் எலும்புகளும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸில் முன்வைக்கப்பட்ட முறைபாட்டிற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மனித எச்சங்கள் வேறொரு இடத்திலிருந்து குறித்த இடத்திற்கு கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த மனித எச்சங்கள் மீதான தடயவியல் பரிசோதனை நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply