கிளிநொச்சி -முதல் பெண் மாவீரர் மாலதியின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

134 Views

IMG 20221010 WA0015 1 கிளிநொச்சி -முதல் பெண் மாவீரர் மாலதியின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சி – தர்மபுரத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மாவீரர் மாலதியின் திருவுருவப்படத்துக்கு ஈகச்சுடரை ஏற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கலைவாணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் த.குருகுலராஜா, பிரதேச சபை உறுப்பினர்களான த.ஜீவராசா மற்றும் ஜெயசித்திரா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், தமிழ்த் தேசியப்பற்றாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு முதல் பெண் மாவீரர் மாலதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply