மலேசியா- தாய்லாந்து எல்லை திறப்பு:89 மியான்மரிகள் கைது 

48 Views

89 மியான்மரிகள் கைது

மலேசியாவின் Pengkalan Kubor பகுதி வழியாக தாய்லாந்திலிருந்து நுழைய முயன்றதாக 89 மியான்மரிகள் தாய்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மலேசியா- தாய்லாந்து இடையிலான எல்லைப் பகுதி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மலேசியாவுக்குள் வெளிநாட்டினரை சட்டவிரோதமாக கடத்தும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று 89 வெளிநாட்டினரை தாய்லாந்து காவல்துறை கைது செய்துள்ளதாகவும் மலேசிய தரப்பில் 33 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மலேசியாவின் Kelantan காவல் தலைமை அதிகாரி முகமது ஜாகி ஹருண் குறிப்பிட்டிருக்கிறார்.

Tamil News

Leave a Reply