பெஹாசஸ் மென்பொருள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வழக்கு பதிவு

508 Views

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்துள்ள பெஹாசஸ் ஸ்பைவெயர் எனப்படும் மென்பொருள் மூலம் தமது நடவடிக்கைகளை தாம் வாழும் நாடுகளின் அரசுகள் கண்காணித்ததாக ஏழு நாடுகளைச் சேர்ந்த 17 ஊடகவியலாளர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரான்ஸில் உள்ள வழக்கறிஞர்கள் மூலம் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வழக்கிற்கான உதவிகளை வழங்கியுள்ளது. கடந்த மாதமும் இரு ஊடகவியலாளர்கள் வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

ஆஜாபைஜானை சேர்ந்த இரண்டு பேர், ஹங்கேரியை சேர்ந்த இருவர், இந்தியாவை சேர்ந்த 5 பேர், மெக்சிகோவைச் சேர்ந்த ஐவர், மொரோக்கோவை சேர்ந்த ஒருவர், ஸ்பெயினை சேர்ந்த ஒருவர் மற்றும் ரொகோவை சேர்ந்த ஒருவர் என 17 பேர் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குத் தொடர்பில் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பெஹாசஸ் மென்பொருள் மூலம் 200 ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துச் சுதந்திரம், தனிநபர் சுதந்திரம், மனித உரிமைகள், மனித உரிமைகளை பாதுகாப்பது போன்றவை தொடர்பில் சிறப்பு விசாரணகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

நாடுகள் தமது நடவடிக்கைகளை கண்காணித்தது தொடர்பில் தாம் அச்சம் அடைந்துள்ளதாக வழக்கை பதிவு செய்துள்ள ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply