படகு மூழ்கியதில் 42 ஏதிலிகள் மரணம்

179 Views

மேற்கு சஹாரா பகுதியில் இருந்து ஸ்பெயின் நாட்டின் கனேரி தீவுகளை நோக்கி ஏதிலிகள் பயணம் செய்த படகு மூழ்கியதால், அதில் பயணம் செய்த 50 பேரில் 42 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 பெண்கள், 8 சிறுவர்கள் மற்றும் 4 ஆண்கள் கொல்லப்பட்டதாக ஸ்பெயினைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை (06) தெரிவித்துள்ளது. ஏனையவர்களை அந்த பிராந்திய மீனவர்கள் காப்பாற்றியதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை (3) ஏற்பட்ட பாதகமான காலநிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டபோதும், அது தொடர்பான விபரங்கள் வெள்ளிக்கிழமையே தெரிய வந்துள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூலை மாதம் வரையில் 7500 இற்கு மேற்பட்டவர்கள் மேற்கு ஆபிரிக்காவில் இருந்து கனேரி தீவுகளுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply