அவுஸ்திரேலிய தடுப்பில் அடைப்பட்டுள்ள ஈரானிய குடும்பம்

228279536 1391012384604499 6660246116665898161 n அவுஸ்திரேலிய தடுப்பில் அடைப்பட்டுள்ள ஈரானிய குடும்பம்

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் எட்டு ஆண்டுகளாக சிறைப்படுத்தப் பட்டிருந்த ஈரானிய குடும்பம் ஒன்று, தற்போது அவுஸ்திரேலிய டார்வின் தடுப்பு மையத்தில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அத்தடுப்பு மையத்தில் அந்த ஈரானிய அகதி குடும்பம் மட்டுமே தடுத்து வைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

கடந்த 2013ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அக்குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நவுருத்தீவுக்கு மாற்றப் பட்டிருக்கின்றனர். தற்போது தாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைக்கு எதிராக தாக்குப் பிடிக்க தங்களுக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என அக்குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

ilakku-weekly-epaper-141-august-01-2021