அவுஸ்திரேலியா: தமிழ் அகதி குடும்பம் முன்பு வாழ்ந்த Biloela பகுதியில் வாழ அனுமதிக்குமாறு வலியுறுத்தல்

368 Views

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடு கடத்தலுக்கெதிராக நீண்ட சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த பிரியா-நடேஸ் குடும்பத்தினர் விரைவில் Biloela பகுதியில் வாழ்வதற்கு அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு, குடிவரவு தடுப்புமுகாமிற்கு கொண்டுசெல்லப்பட்ட பிரியா-நடேஸ் குடும்பம் தொடர்ச்சியாக சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவந்தது. லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிரியா-நடேஸ் குடும்பம் Biloela-இல் வாழ அனுமதிக்கப்படுவர் என வாக்குறுதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இக்குடும்பத்தின் விடுதலைக்காக தொடர்ச்சியாகப் போராடிய Home to Bilo அங்கத்தவர்கள் கோரியுள்ளனர்.

Tamil News

Leave a Reply