பேரறிவாளன் விடுதலை

118 Views

இழந்த வாழ்க்கை இனிமேல் வந்திடுமா

குழந்தைப் பருவம் கும்பிட்டும் திரும்புமா

அழுது பிரண்டாலும் ஆண்டவன் இரங்குவானா

எழுதி வைத்தாலும் எடுக்குமா சட்டமிதை

இருபது வயதில் இலக்குவைத்து பிடித்தனர்

இருபத்திரண்டாம் ஆண்டில் இரக்கத்தில் விட்டனர்

இடையிலே கழிந்த முற்பத்தியொரு வருடமும்

இந்திய அரசிடம் இருக்கிறதா திருப்பித்தர

ஒன்றா இரண்டா ஓராயிரம் வேண்டுதல்கள்

ஒற்றைத் தாயவள் ஓடித்திரிந்த மண்கூறும்

கன்றைத் தேடி  கண்ணீர்விட்ட பசுவின்கதை

கற்பித்த மண்ணுக்கு கண்குருடாய் ஆனதுவோ

இயலாமையை மறைத்திட இவனா கிடைத்திட்டான்

பயத்துடன் மறைப்பதற்கு பலியிட்டீர் பலரையிங்கு

அயல்நாட்டில் அரங்கேற்றிய அவலங்கள் மறந்ததேனோ

தயவுசெய்து நிறுத்துங்கள் தவறுகளை திருத்துங்கள்

அரசியல் வேண்டாம் அவனையினி விட்டிடுங்கள்

பரபரப்பு வேண்டியே புதைக்கவேண்டாம் நியாயத்தை

வரம்பை மீறாதீர்கள் விழித்தெழுந்தால் தாங்கமாட்டீர்

உரம்போட்டு வளர்ந்துவிட்டோம் உண்மைகள் தோற்றிடாது

கலாநிதி. நாகலிங்கம் சிவயோகன் Tamil News

Leave a Reply